நிலவைப் புடிக்க ஆசை வைச்சேன் -எனோ
நித்தம் எழும்பி நானும் குதிச்சேன்
தலையை சுத்த கீழே விழுந்தேன் -செல்லம்மா
தழுவ நீயும் ஒரு வழியை சொல்லம்மா (ஆண் )
கிறுக்குப் புடிச்சுப் பேசுறியே -அட
கேனத்தனமா நீயும் அலையுறியே
வட்ட நிலா உனக்கு இங்கே கிட்டுமா -நீயும்
வாங்கப்போறே பூசைகளை மொத்தமா (பெண்)
எடுத்த வேலை நானும் முடிக்கவில்லை -எனக்கோ
இரவு பகல் தூக்கம் வல்லை
தடுத்து நீயும் மிரட்டுறியே கண்ணம்மா -நான்
தாகம் தீர்க்க வந்திடுஎன் பொன்னம்மா (ஆண் )
இருக்கும் வேலையோ முடியாது -நீயும்
எம்பிக் குதித்தும் ஆகாது
பொழப்பை பாக்க வேணும் புரியுதா -இப்படி
புலம்புவதால் பலனும் இல்லை தெரியுதா (பெண் )
மனசில் உள்ளதை சொல்லி புட்டேன் -உன்னால்
மதி மயக்கம் தீர்த்துக் கிட்டேன்
கனவில் வரும் கட்டழகி நீயடி -நீ
கருணை காட்ட மனசுக்குள்ளே தேனடி (ஆண் )
ஊரை அழைச்சுப் பேசவேணும் -எனது
உறவு முறை வரவும் வேணும்
கூரை வீடு எனக்கு வேணும் வாங்குய்யா -உனக்கு
கொழந்தை பலவும் பெத்துத் தருவேன் நானய்யா (பெண்)
நித்தம் எழும்பி நானும் குதிச்சேன்
தலையை சுத்த கீழே விழுந்தேன் -செல்லம்மா
தழுவ நீயும் ஒரு வழியை சொல்லம்மா (ஆண் )
கிறுக்குப் புடிச்சுப் பேசுறியே -அட
கேனத்தனமா நீயும் அலையுறியே
வட்ட நிலா உனக்கு இங்கே கிட்டுமா -நீயும்
வாங்கப்போறே பூசைகளை மொத்தமா (பெண்)
எடுத்த வேலை நானும் முடிக்கவில்லை -எனக்கோ
இரவு பகல் தூக்கம் வல்லை
தடுத்து நீயும் மிரட்டுறியே கண்ணம்மா -நான்
தாகம் தீர்க்க வந்திடுஎன் பொன்னம்மா (ஆண் )
இருக்கும் வேலையோ முடியாது -நீயும்
எம்பிக் குதித்தும் ஆகாது
பொழப்பை பாக்க வேணும் புரியுதா -இப்படி
புலம்புவதால் பலனும் இல்லை தெரியுதா (பெண் )
மனசில் உள்ளதை சொல்லி புட்டேன் -உன்னால்
மதி மயக்கம் தீர்த்துக் கிட்டேன்
கனவில் வரும் கட்டழகி நீயடி -நீ
கருணை காட்ட மனசுக்குள்ளே தேனடி (ஆண் )
ஊரை அழைச்சுப் பேசவேணும் -எனது
உறவு முறை வரவும் வேணும்
கூரை வீடு எனக்கு வேணும் வாங்குய்யா -உனக்கு
கொழந்தை பலவும் பெத்துத் தருவேன் நானய்யா (பெண்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக