வெள்ளி, 6 ஏப்ரல், 2018

அம்மா நல்வழி 332

அம்மா    நல்வழி   நீ   காட்டு -இந்த 
அகிலமே  உனது  விளையாட்டு 
வம்பால்  உலகம்  அழியாமல் இங்கே 
வளமை  வல்லமை  குறையாமல்    (அம்மா )

சோம்பல்  என்பது   தேவை யில்லை -மக்கள் 
சுகம் பெற  உழைத்தால்  துன்பமில்லை 
ஆம்பல்   பூத்திட்ட   குளத்தினிலே -என்றும் 
அழகிய  காட்சிக்கோ   பஞ்சமில்லை (அம்மா )

சாதி  என்கின்ற   ஆணவமே -நம்மில் 
சற்றும்   எங்கிலும்  நுழையாமல் 
மேதினி   காத்திட  நீ  வருவாய் -உலகில் 
மேன்மையும்  தூய்மையும்  நீ  தருவாய் (அம்மா)

பெண்ணால்  தேசம்  சிறந்திடவும் -அவர் 
பெருமைகள்  வாழ்வினில்  அடைந்திடவும் 
கண்ணாய் எங்கும்  நினைத்திடவும் -எம் 
கருணைக்   கடலே  அருள்  புரிவாய் (அம்மா )

எல்லா    வரங்களும்   நீ யளிக்க -நமது 
இந்தியா   சிறப்பினில்  உயர்ந்திடுமே 
பொல்லா  குணமுள்ள  பகைவர்களும் -ஒரு நாள் 
பொசுங்கியே   அழிவார்  நிச்சயமே (அம்மா )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக