நீரில் வாழும் மீனினம் -ஏன்
நில்லாமல் எங்கும் ஓடுது
வேரைக் கொண்ட மரங்களோ இங்கு
விரும்பித் தலையை ஆட்டுது
பசுவை விட்டு கன்றுக் குட்டி -எதற்கு
பாய்ந்து பாய்ந்து ஓடுது
சிசுவின் காதில் தாயும் -நன்கு
சிரிக்க சேதி சொல்லுது
மொட்டு அவிழ்ந்த முல்லையோ -மனதில்
மோக வெறி ஊட்டுது
கட்டவிழ்ந்த மேனி என்னவோ -புது
காதல் சுரம் ஏற்றுது
புள்ளினங்கள் வானில் பறந்து -ஒரு
புதிய செய்தி கொண்டு போகுது
அள்ளி வரும் அழகினிலே -வானில்
அழகு நிலா சிரிக்குது
கானில் வாழும் உயிரினங்கள் -அட
கணக்கு பார்த்தல் இல்லையே
வீணில் எதற்கு சண்டைகள் -நீவிர்
விரைந்து ஒன்றாய் சேர்கவே
நில்லாமல் எங்கும் ஓடுது
வேரைக் கொண்ட மரங்களோ இங்கு
விரும்பித் தலையை ஆட்டுது
பசுவை விட்டு கன்றுக் குட்டி -எதற்கு
பாய்ந்து பாய்ந்து ஓடுது
சிசுவின் காதில் தாயும் -நன்கு
சிரிக்க சேதி சொல்லுது
மொட்டு அவிழ்ந்த முல்லையோ -மனதில்
மோக வெறி ஊட்டுது
கட்டவிழ்ந்த மேனி என்னவோ -புது
காதல் சுரம் ஏற்றுது
புள்ளினங்கள் வானில் பறந்து -ஒரு
புதிய செய்தி கொண்டு போகுது
அள்ளி வரும் அழகினிலே -வானில்
அழகு நிலா சிரிக்குது
கானில் வாழும் உயிரினங்கள் -அட
கணக்கு பார்த்தல் இல்லையே
வீணில் எதற்கு சண்டைகள் -நீவிர்
விரைந்து ஒன்றாய் சேர்கவே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக