கனவினில் வந்தாள் ---என்
காதலைச் சொன்னாள்
நினைவினில் விழித்தேன் ---எனோ
நில்லாது மறைந்தாள்
உறவினை எண்ணியே உருகுது நெஞ்சம் --அவள்
உருவினைக் கண்டிட உலகமே தஞ்சம்
வரவினை எண்ணி வாடுது மஞ்சம் ---இனி நீ
வந்தால் என்னிடம் வளங்கள் கொஞ்சும்
சின்ன மெல்லிடை சிலிர்ப்பினை ஊட்டும் --அவள்
செம்பவள இதழ்கள் ஜீவனை வாட்டும்
அன்னமும் நடையில் அவளிடம் தோற்கும் ---தினம்
அள்ளியே அணைத்தால் என்னுடல் வேர்க்கும்
சொல்லிக் கொடுப்பாள் சுகம்பெறு கலைகள் ---அந்த
தோகையாள் கிடைத்தால் எனக்கு சுக்கிர திசைகள்
பள்ளிப் பாடங்கள் படித்திட வேண்டும் ---இனியென்
பாவை மடியினில் துயில் பெறவேண்டும்
பிள்ளைகள் பாவும் பெற்றிட வேண்டும் ---இங்கு
பெருமையில் அவரை நன்கு வளர்த்திட வேண்டும்
நல்லவை தீயவை நான் சொலல் வேண்டும் ---நம்
நாட்டைக் காத்திட என்றும் நாம் எழ வேண்டும்

Thanks for sharing a good blog
பதிலளிநீக்குchiropractor home loan
it is outstanding helpful.it is best.
tenanted investment property