என்னாசைக் காதலன் ---எனக்கு
இன்பத்தை அளித்தவன்
பொன்னாளை மறந்ததேன் ---என்னை
புண்ணாக்கி ரசிப்பதேன்
கண்ணோடு கலந்தவன் ---என்
காதலில் வாழ்ந்தவன்
தன்னாசை மறந்ததேன் ---என்னை
தடுமாற வைப்பதேன்
இரவென்றால் அவனன்றோ ---எனக்கு
இருந்திட்ட உறவன்றோ
மறந்தின்று போனதேன் ---என்
மையலைத் துறந்ததேன்
அணைத்தன்று சிரித்தவன் ----என்னை
அள்ளியே சுகித்தவன்
நினைப்பினை மறந்ததேன் ---இன்று
நெடுதூரம் போனதேன்
காதலே பொய்யென்பேன் ---அது
கண்ணீரைத் தருமென்பேன்
ஆதலின் இளையோரே --காதல்
அவலத்தில் சிக்காதீர்
பெற்றோரைப் பாருங்கள் ---அவரோடு
பெருமையாய் வாழுங்கள்
கற்றதை நினையுங்கள் ---ஏழை
கண்ணீரைத் துடையுங்கள்
இன்பத்தை அளித்தவன்
பொன்னாளை மறந்ததேன் ---என்னை
புண்ணாக்கி ரசிப்பதேன்
கண்ணோடு கலந்தவன் ---என்
காதலில் வாழ்ந்தவன்
தன்னாசை மறந்ததேன் ---என்னை
தடுமாற வைப்பதேன்
இரவென்றால் அவனன்றோ ---எனக்கு
இருந்திட்ட உறவன்றோ
மறந்தின்று போனதேன் ---என்
மையலைத் துறந்ததேன்
அணைத்தன்று சிரித்தவன் ----என்னை
அள்ளியே சுகித்தவன்
நினைப்பினை மறந்ததேன் ---இன்று
நெடுதூரம் போனதேன்
காதலே பொய்யென்பேன் ---அது
கண்ணீரைத் தருமென்பேன்
ஆதலின் இளையோரே --காதல்
அவலத்தில் சிக்காதீர்
பெற்றோரைப் பாருங்கள் ---அவரோடு
பெருமையாய் வாழுங்கள்
கற்றதை நினையுங்கள் ---ஏழை
கண்ணீரைத் துடையுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக