வெள்ளி நிலாவே வெள்ளி நிலாவே வாராயோ --அவர்
வரும் வேளை என்பதை நீயும் அறிவாயா
துள்ளி திரியும் மீனாய்த் இருந்தேன் அன்று ---எனோ
தூங்காமல் அவரால் துன்பம் கொண்டேன் இன்று
அள்ளி அள்ளியே என்னை எடுப்பார் ---எனக்கு
அன்பு முத்தங்கள் ஆயிரமாவது நிறையவே கொடுப்பார்
பள்ளிப் பாடங்கள் பலவகை கற்றேன் --என்னை
பகலிலும் இரவிலும் பார்த்து நன்றாய் ரசிப்பார்
சொல்லிக் கொடுத்தது சுகமாய்த் தெரிந்தது எனக்கு ---அது
சொர்க்கத்தை அளிக்கும் வழியென்பது கணக்கு
புள்ளி வைத்திட புதையலைக் கண்டேன் அன்று ---நல்ல
பொங்கித் ததும்பும் இளமை மேனி ஜொலிப்பது இன்று புரியாதா
திருநாள் வருவது தினமும் என்பது புரியுமா --அடி
தேனும் பாலுமாய் ஆனோம் நாங்கள் தெரியாதா
வருவார் என்றே வழிமேல் பழியாய்க் கிடப்பேன் ---அவர்
வந்ததும் வட்டியும் முதலுமாய்க் கொடுப்பேன்
காதல் என்பது கண்களில் மலர்கின்ற ஜாலம் ---நீயும்
கண்டு கொண்டால் வருமே உனக்குமிந்தக் கோலம்
ஆதலால் காதலை உண்மை அன்புடன் வளர்ப்பாய் --உன்
அன்பிலே அவரை உன்னகத்திலே வைத்துக் காப்பாய்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக