அவன் :: நினைச்ச படியென்னைப் பேசுறே ---நான்
நெருங்கினா கொஞ்சம் எட்டியே படுக்கி றே
தனக்கிணை இல்லையெநத் தாவுறே ---உன்னை
தழுவிட வந்தாக்க வீணிலே கூவுறே
அவள் --பொழப்பினை பாத்துக்க தெரியலே --நீயெம்
புருஷனாய் இருந்தும் விளங்கலே
புள்ளையை வளர்த்திட வேண்டாமா ---உனக்கு
பொம்பளையா இருந்திட்டா போதுமா
அவன் ---கவலைக ஏண்டி நீயும் படுகிறே ---கொஞ்சம்
காசுக்கு சீட்டாட்டத்தில் நானும் ஜெயிக்கிறேன்
மாடி மனைக நிறைய வாங்குறேன் --உலகில்
மம்முத ராஜனாய் தெருவிலே உலாவுவேன்
அவள் ---வெட்கம் கெட்டுமே நீ போகாதே ---வீணிலே
காசினை எடுத்து சீட்டினில் போக்காதே
எங்களைக் காத்திட நீயும் வேண்டாமா ---என்
இருபிள்ளைக நல்லாப் படித்திடக் கூடாதா
அவன் ---எண்ணியே தினமும் உழைப்பேனடி ---உன்
இனிய சொல்லுக்கு மதிப்பும் குடுப்பேனடி
தண்ணியை சீட்டையும் இனிமேல் தொடமாட்டேன் ---என்
தங்கமே உந்தன் எண்ணப்படி நடப்பேனடி
இருவரும் ---விருந்து வைச்சுக் கொண்டாடுவோம் ---நாம
விடியுமட்டும் பருவப் பாடம் பலவும் படிப்போம்
கரும்பும் இனிப்புமா தினம் கலந்திருப்போம் ---அந்த
கடவுள் அருளாலே ரொம்ப காலம் வாழ்ந்திருப்போம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக