நிலவில் முகத்தை மறைத்தாய் --என்
காதல் நினைவை எனோ வதைத்தாய்
பழ க வந்தேன் அருகே ---எனோ
பக்கம் திரும்பி முறைத்தாய்
உன்னை எண்ணித் துடித்தேன் ---உன்
உறவை நினைத்து மகிழ்ந்தேன்
கண்ணில் அம்பு தொடுத்தாய் ---என்னை
காதல் வலையில் அடைத்தாய்
தப்பி போய்விட நினைத்தேன் ---உன்னை
தழுவ ஆசையில் வெடித்தேன்
தக்கதோர் துணையாய் வருவேன் ---இரவில்
தழுவி அனைத்தும் தருவேன்
உனையே உயிராய் நினைப்பேன் ---எனது
உடமை யாவையும் கொடுப்பேன்
கண்ணில் காவல் வைப்பேன் ---உனது
காதலில் உருகிக் கிடப்பேன்
இன்னும் என்னடி சொல்ல ---என்
இதயம் திறந்தேன் மெல்ல
ஒன்றாய் நாமென்றும் வாழலாம் ---இந்த
உலகை அன்பால் ஆளலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக