சின்னப் புள்ளெ சிவப்பாயி ---நீயும்
சீக்கிரமா வா தாயி
கன்ன க் குழி கதுப்பாலே ---என்னை
கட்டிப் போட வேண்டாமடி
கண்கள் உறக்கம் இல்லையடி ---இங்கே
கால நேரம் தெரியல்லேடி
பெண்னே உன்னை நினைச்சு ---நான்
புலம் பும் கதை கேட்கலேயா
ஆழவே உழுது வைச்சேன் ---நல்ல
அழகு நெல் நாத்து விட்டேன்
வேளை முறை தவறாமே ---நான்
வேண மட்டும் நீர் இறைச்சேன்
நாத்து நல்லாவே வளர்ந்ததடி ---நமக்கு
நல்ல பலனும் கிடைக்குமடி
விளைஞ்ச நெல்லைக் காசாக்கி ---உனக்கு
வேணுமட்டும் பரிசு தாரேன்
சுங்கடியில் நல்ல சேலை --நீ
சொக்கிப் போக காசுமாலை
பந்து சனம் கூட்டி வைச்சு ---நான்
பரிசம் போட நாளை வாறேன்
கண்ணாட்டி உன்னையே நான் கல்யாணம் செய்திடுவேன் ---எனக்கு
புள்ளைக ரெண்டு பெத்து மட்டும் கொடுத்து விடு
எந்நாளும் சொகமாக இருப்போம் இளமயிலே ---நம்ம
ஐயனாரு துணையாலே அம்புட்டும் நடக்குமடி
சீக்கிரமா வா தாயி
கன்ன க் குழி கதுப்பாலே ---என்னை
கட்டிப் போட வேண்டாமடி
கண்கள் உறக்கம் இல்லையடி ---இங்கே
கால நேரம் தெரியல்லேடி
பெண்னே உன்னை நினைச்சு ---நான்
புலம் பும் கதை கேட்கலேயா
ஆழவே உழுது வைச்சேன் ---நல்ல
அழகு நெல் நாத்து விட்டேன்
வேளை முறை தவறாமே ---நான்
வேண மட்டும் நீர் இறைச்சேன்
நாத்து நல்லாவே வளர்ந்ததடி ---நமக்கு
நல்ல பலனும் கிடைக்குமடி
விளைஞ்ச நெல்லைக் காசாக்கி ---உனக்கு
வேணுமட்டும் பரிசு தாரேன்
சுங்கடியில் நல்ல சேலை --நீ
சொக்கிப் போக காசுமாலை
பந்து சனம் கூட்டி வைச்சு ---நான்
பரிசம் போட நாளை வாறேன்
கண்ணாட்டி உன்னையே நான் கல்யாணம் செய்திடுவேன் ---எனக்கு
புள்ளைக ரெண்டு பெத்து மட்டும் கொடுத்து விடு
எந்நாளும் சொகமாக இருப்போம் இளமயிலே ---நம்ம
ஐயனாரு துணையாலே அம்புட்டும் நடக்குமடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக