கண்ணில் ஆடும் கலையே --நீ
காமன் வடித்த சிலையோ
உன்னில் ஆடும் இளமை --அது
உயிரைப் பறிக்கும் வலிமை
நாணிக் கோணி நடப்பாய் --அதிலே
நாணம் கலந்து இருக்கும்
தேனில் விழுந்த பழமோ ---அந்த
தேவ லோகத்து அமிழ்தோ
சிரித்து சிரித்து வருவாய் --அது
சீதள நிலவாய்த் தெரியும்
எரிக்கும் கலையினைக் கற்றாய் --இங்கு
எதற்கு வரமெனப் பெற்றாய்
பின்னல் சடையினை இழுப்பேன் --உனது
பிடியிடை தொட்டுமே வளைப்பேன்
கன்னல் கலந்திட்ட சாறோ --நீயும்
காமன் வந்திடும் தேரோ
சரசம் புரிந்திட வருவாய் --எனக்கு
சகலமும் எனக்கே தருவாய்
புருஷன் ஆவேன் உனக்கு --காதல்
போதையில் வந்திட்டக் கணக்கு
காமன் வடித்த சிலையோ
உன்னில் ஆடும் இளமை --அது
உயிரைப் பறிக்கும் வலிமை
நாணிக் கோணி நடப்பாய் --அதிலே
நாணம் கலந்து இருக்கும்
தேனில் விழுந்த பழமோ ---அந்த
தேவ லோகத்து அமிழ்தோ
சிரித்து சிரித்து வருவாய் --அது
சீதள நிலவாய்த் தெரியும்
எரிக்கும் கலையினைக் கற்றாய் --இங்கு
எதற்கு வரமெனப் பெற்றாய்
பின்னல் சடையினை இழுப்பேன் --உனது
பிடியிடை தொட்டுமே வளைப்பேன்
கன்னல் கலந்திட்ட சாறோ --நீயும்
காமன் வந்திடும் தேரோ
சரசம் புரிந்திட வருவாய் --எனக்கு
சகலமும் எனக்கே தருவாய்
புருஷன் ஆவேன் உனக்கு --காதல்
போதையில் வந்திட்டக் கணக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக