நிலவாய் என் வாழ்வில் நுழைந்தாய் --என்
நெஞ்சம் உன்னாலே மறந்தேன்
பழகிட வருவதே நெருக்கம் --நீ
பார்த்து முறைத்தாலே வருத்தம்
நீரில் நின்றாடி மகிழ்வேன் --உந்தன்
நினைவுகள் தண்ணீரில் மிதக்கும்
ஊரில் நீ தானே எனக்கு உசத்தி --காதல்
உறவால் உண்டாகும் மகிழ்ச்சி
கட்டில் கதை பேசி இழுக்கும் --அங்கு
காமன் கணைகளோ பறக்கும்
தொட்டில் நினைவுகள் மலரும் --நித்தம்
தொட்டுச் சுவைத்திடத் துடிக்கும்
இரவும் பகலாகத் தெரியும் --என்
இளமை துடிப்புகள் எரிக்கும்
உறவினை எண்ணியே இருப்பேன் --உன்னை
என் வாழ்வில் என்றுமே மறவேன்
கட்டி அணைத்திட இனிது --நீயோ
காலம் தந்திட்ட நல்லமுது
தொட்டுச் சுவைக்கின்ற பருவம் --நான்
சொல்லியும் அடங்காத கர்வம்
காலம் இனிதாக வருமோ --என்
காதல் மணமாகப் பெறுமோ
வாழ வரமொன்று தருவாய் --எந்தன்
வாழ்வே நீதானே வாராய்
நெஞ்சம் உன்னாலே மறந்தேன்
பழகிட வருவதே நெருக்கம் --நீ
பார்த்து முறைத்தாலே வருத்தம்
நீரில் நின்றாடி மகிழ்வேன் --உந்தன்
நினைவுகள் தண்ணீரில் மிதக்கும்
ஊரில் நீ தானே எனக்கு உசத்தி --காதல்
உறவால் உண்டாகும் மகிழ்ச்சி
கட்டில் கதை பேசி இழுக்கும் --அங்கு
காமன் கணைகளோ பறக்கும்
தொட்டில் நினைவுகள் மலரும் --நித்தம்
தொட்டுச் சுவைத்திடத் துடிக்கும்
இரவும் பகலாகத் தெரியும் --என்
இளமை துடிப்புகள் எரிக்கும்
உறவினை எண்ணியே இருப்பேன் --உன்னை
என் வாழ்வில் என்றுமே மறவேன்
கட்டி அணைத்திட இனிது --நீயோ
காலம் தந்திட்ட நல்லமுது
தொட்டுச் சுவைக்கின்ற பருவம் --நான்
சொல்லியும் அடங்காத கர்வம்
காலம் இனிதாக வருமோ --என்
காதல் மணமாகப் பெறுமோ
வாழ வரமொன்று தருவாய் --எந்தன்
வாழ்வே நீதானே வாராய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக