செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

வழக்கம் 565

இரவு    கால    நிலவு   --நீ
 இதயம்  திறந்து   பழகு
 உறவு   தேடும்   காலம்  --இதனை
 உணர்ந்து  கொள்ளு   நாளும்

எடுத்துக்  கொடுக்கச்  சிவக்கும்  --உன்
 இதழ்கள்   என்னை   இழுக்கும்
 அடுத்த   நிலைக்கு   தொடரும் --கொண்ட
 ஆசை  மெல்லப்   படரும்

பொங்கும்   உணர்வு   துடிக்கும்  --அது
புதுமை   எண்ணம்   படைக்கும்
மங்கை  மனதும்   மயங்கும் --புதிய
மகிழ்ச்சி  எங்கிலும்   நிலவும்

காலை   வந்தால்  விழிக்கும்  --அந்த
காளை   செயலைப்   பழிக்கும்
நாளை  எண்ணியே   சிரிக்கும்  --அதில்
நல்ல  எண்ணம்   விதைக்கும்

கால   காலங்கள்    தொடரும்  --இந்த
காதல்  வேலைகள்   நடக்கும்
வாழும்  உலகினில்   வழக்கம்  --அதன்
வழியே   செல்வது   பழக்கம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக