திங்கள், 13 ஆகஸ்ட், 2018

நலவாழ்வு 562

 தேனைப்    போலப்   பேசு  --இளம்
 தென்றல்    ஆகவே   வீசு
 ஆடி          அசையும்  தேரு  --இங்கு
 அசந்து    போகும்   ஊரு

 பல்லைப்   பார்க்க    முத்து  --அது
 பரமன்    கொடுத்த   சொத்து
 கள்ளி    மனது    வெள்ளை  --அவளோ
 காம      லோக    எல்லை

 பழுத்த    பழங்கள்    கூட்டம்  --அவள்
 பருவக்   காலத்    தோட்டம்
 செழித்த   தென்னங்  குலைகள்  --தேவன்
 வடித்த   அழகுச்     சிலைகள்

அணில்    கடித்த    பழமோ --அவள்
 ஆடும்    அழகு   மயிலோ
 பனியில்   நனைந்த   மலரோ  --நம்
 பக்கம்   வந்தால்   குளிரோ

காலம்    எங்கோ   செல்லும்  --அவள்
 கட்டழகு   என்னையும்   கொல்லும்
 வேளை   வந்தால்   நடக்கும்  --நான்
 விரும்பும்   வாழ்வு   கிடைக்கும்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக