உன்னை நினைத்து சிரிப்பேன் --உன்
உறவை எண்ணி மலர்வேன்
என்னில் அன்று கலந்தாய் --ஏன்
இதயம் முழுதும் நிறைந்தாய்
கன்னல் தமிழும் இனிமை --உனது
காதல் எனக்கு அருமை
என்னில் நீயும் படர்வாய் ---அந்த
இனிய நிகழ்வு தொடரும்
அன்ன நடை பயில்வேன் --உன்
அகண்ட மார்பில் துயில்வேன்
பின்னும் இடையை அசைப்பேன் --நீயும்
மின்னலாய் என்னுள் புகுவாய்
கண்கள் மயங்கிக் கிடப்பேன் --என்
காதில் மெல்ல அழைப்பாய்
பெண்மை என்பதை உணர்வேன் --ஒரு
பேச்சும் இன்றிக் கிடப்பேன்
சிவந்த உடலினை வளைப்பாய் --சின்ன
சிற்றுளி கொண்டு தகர்ப்பாய்
வசந்த காலம் இனிது ---அந்த
வாழ்வு பலர்க்கு அரிது
உள்ளம் இணைதல் வேண்டும் ---அதில்
உண்மை நிறைதல் வேண்டும்
கள்ளம் மறைதல் வேண்டும் ---நல்ல
காதல் அங்கே மலரும்
உறவை எண்ணி மலர்வேன்
என்னில் அன்று கலந்தாய் --ஏன்
இதயம் முழுதும் நிறைந்தாய்
கன்னல் தமிழும் இனிமை --உனது
காதல் எனக்கு அருமை
என்னில் நீயும் படர்வாய் ---அந்த
இனிய நிகழ்வு தொடரும்
அன்ன நடை பயில்வேன் --உன்
அகண்ட மார்பில் துயில்வேன்
பின்னும் இடையை அசைப்பேன் --நீயும்
மின்னலாய் என்னுள் புகுவாய்
கண்கள் மயங்கிக் கிடப்பேன் --என்
காதில் மெல்ல அழைப்பாய்
பெண்மை என்பதை உணர்வேன் --ஒரு
பேச்சும் இன்றிக் கிடப்பேன்
சிவந்த உடலினை வளைப்பாய் --சின்ன
சிற்றுளி கொண்டு தகர்ப்பாய்
வசந்த காலம் இனிது ---அந்த
வாழ்வு பலர்க்கு அரிது
உள்ளம் இணைதல் வேண்டும் ---அதில்
உண்மை நிறைதல் வேண்டும்
கள்ளம் மறைதல் வேண்டும் ---நல்ல
காதல் அங்கே மலரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக