கண்ணின் கருமணி என் காதல் பெண்மணி --என்றும்
உன்னில் நானடி கனிந்த உறவில் சேரடி
விண்ணில் நிலவடி எனக்கு வேதம் நீயடி --மாய
கள்ளி நீயடி உன் மேலுள்ள காதல் மெய்யடி
அன்பு வருமடி எனது ஆசை நிசமடி --நல்ல
தெம்பில் சூரனடி எனக்கு வாய்த்த தேவதை என்மடி
வம்பு தவறடி என் வாழ்வில் ஒளியடி --என்னிடம்
வாழ்ந்து பாரடி வருவதால் வருமே நல்ல வரும்படி
தேனும் தானடி நானும் திரட்டிப் பாலடி --உன்னை
மணந்தால் எனக்கு உயர்வு வரும் ஒருபடி
அழகுச் சிலையடி எனக்கு ஆசைக் கிளியடி --நான்
அணைக்கும் கையடி உன் அருகிருக்க வருமே சுகமடி
வாழ்வது கலையடி நீயும் வந்திங்கு இணையடி --உலகில்
வல்லமை பெறும்படி நாமும் வாழ்வதும் முறையடி
மீனடியுன் கண்ணடி இரவில் திரியும் மின்மினி அழகடி --உனக்கு
மோகம் வருமடி நீயோ இனிக்கும் முக்கனிச் சாறடி
சொல்வது தப்போடி நாம் சுகிப்பது மனநிறைவடி --அழகு
சுந்தரி என்னடி நீயும் தூர விலகுதல் முறையோடி
ஓரடி ஈரடி உன்னிடம் நான் உளறினேன் மறுபடி --எனது
தேவியுன் சொல்படி நடக்கும் சிறுத் தொண்டன் ஆனேனடி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக