கொள்ளை அழகு உருவம் --அந்த
குமரி நல்ல பருவம்
பல்லைக் காட்டிச் சிரித்தாள் --வீணில்
காதலில் ஏனோ வீழ்ந்தேன்
எல்லை மீறினேன் அன்று --அதனால்
ஏங்கியே தவிக்கிறேன் இன்று
தொல்லை அதிகம் தோழா --எனக்கு
தோல்வி இத்தனை நாளா
ஊரும் சிரிச்சுப் போச்சு --என்
உற்வும் வெறுத்திட லாச்சு
பேரைக் கெடுத்துக் கொண்டேன் --அவளை
பிரிய மனமும் நொந்தேன்
கால காலங்கள் காதல் --அது
கைகளை மீறினால் சாதல்
நல்ல வழிதன்னை மறந்தேன் --இன்று
நாயெனத் தெருவில் திரிகிறேன்
இளமை எண்ணங்கள் இனிக்கும் --அவளெனை
ஏற்றுக் கொள்கிற வரைக்கும்
வளமையை வாழ்விலே பெறுவேனா --அந்த
வஞ்சியுடன் நலமாய் மகிழ்வேனா
குமரி நல்ல பருவம்
பல்லைக் காட்டிச் சிரித்தாள் --வீணில்
காதலில் ஏனோ வீழ்ந்தேன்
எல்லை மீறினேன் அன்று --அதனால்
ஏங்கியே தவிக்கிறேன் இன்று
தொல்லை அதிகம் தோழா --எனக்கு
தோல்வி இத்தனை நாளா
ஊரும் சிரிச்சுப் போச்சு --என்
உற்வும் வெறுத்திட லாச்சு
பேரைக் கெடுத்துக் கொண்டேன் --அவளை
பிரிய மனமும் நொந்தேன்
கால காலங்கள் காதல் --அது
கைகளை மீறினால் சாதல்
நல்ல வழிதன்னை மறந்தேன் --இன்று
நாயெனத் தெருவில் திரிகிறேன்
இளமை எண்ணங்கள் இனிக்கும் --அவளெனை
ஏற்றுக் கொள்கிற வரைக்கும்
வளமையை வாழ்விலே பெறுவேனா --அந்த
வஞ்சியுடன் நலமாய் மகிழ்வேனா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக