கண்ணாளன் வருவார் -ஒரு
கனிமுத்தம் தருவார்
மின்னாமல் இடித்து -இனி
மழை பெய்யும் தோழி
பொன்நாளும் இதுதான் --அந்த
புதுப் பாடல் சுகம்தான்
என்னாசைக் கனவு -என்றும்
இன்பமாய் பலிக்கும்
விண்ணிலே பறப்பேன் -நான்
விடி வெள்ளி ஆவேன்
கண்களில் மலர்ச்சி -எங்கள்
காதலில் வளர்ச்சி
மகவொன்று போதும் -அது
மகிழ்ச்சியே ஆகும்
அகவைகள் சென்றால் -இன்னும்
அழகாகும் தோற்றம்
நன்றாக வளர்ப்பேன் -தினம்
நல்லவை சொல்வேன்
தென்றலும் வீசும் -எமக்கு
தேனாக இனிக்கும்
நன்றியைச் சொல்வேன் -உழைப்பில்
நம்பிக்கை கொள்வேன்
கன்றுடன் பசுபோல் -நானும்
களிப்புடன் வாழ்வேன்
கனிமுத்தம் தருவார்
மின்னாமல் இடித்து -இனி
மழை பெய்யும் தோழி
பொன்நாளும் இதுதான் --அந்த
புதுப் பாடல் சுகம்தான்
என்னாசைக் கனவு -என்றும்
இன்பமாய் பலிக்கும்
விண்ணிலே பறப்பேன் -நான்
விடி வெள்ளி ஆவேன்
கண்களில் மலர்ச்சி -எங்கள்
காதலில் வளர்ச்சி
மகவொன்று போதும் -அது
மகிழ்ச்சியே ஆகும்
அகவைகள் சென்றால் -இன்னும்
அழகாகும் தோற்றம்
நன்றாக வளர்ப்பேன் -தினம்
நல்லவை சொல்வேன்
தென்றலும் வீசும் -எமக்கு
தேனாக இனிக்கும்
நன்றியைச் சொல்வேன் -உழைப்பில்
நம்பிக்கை கொள்வேன்
கன்றுடன் பசுபோல் -நானும்
களிப்புடன் வாழ்வேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக