விண்ணும் முகிலும் -சேர்ந்து
விளையாடல் போலே
உன்னோடு நானும் -அன்பால்
உறவாட வேண்டும்
கண்ணே உன் மடிசாய்ந்து -தினம்
கதைகள் கேட்க வேண்டும்
காணாத உலகம் -இனிமேல்
கண்டாக வேண்டும்
மின்னாமல் முழங்காமல் -உடன்
வருகின்ற மழை போல்
பொன்மேனி உன்னுடலில் -நானும்
புகுந்தாக வேண்டும்
அலையோடு அலையாக-அதில்
வாழும் மீன்போல்
கலையோடு காதலில் -நாம்
கலந்தாக வேண்டும்
பாலோடு சுவையாக -நல்ல
பழங்களின் இனிப்பாக
சேலாடும் விழியாளே -உன்னை
சேர்ந்திட வேண்டும்
பகலுக்குள் இரவாகி -நாம்
பாசத்தில் உருவாகி
புதுவாழ்வு கண்டிட -இன்றே
புறப்பட வேண்டும்
இனியென்ன சொல்ல -இங்கே
எவருண்டு வெல்ல
கோபமென்ன மானே -நீ எனக்கு
கொல்லி மலைத் தேனே
விளையாடல் போலே
உன்னோடு நானும் -அன்பால்
உறவாட வேண்டும்
கண்ணே உன் மடிசாய்ந்து -தினம்
கதைகள் கேட்க வேண்டும்
காணாத உலகம் -இனிமேல்
கண்டாக வேண்டும்
மின்னாமல் முழங்காமல் -உடன்
வருகின்ற மழை போல்
பொன்மேனி உன்னுடலில் -நானும்
புகுந்தாக வேண்டும்
அலையோடு அலையாக-அதில்
வாழும் மீன்போல்
கலையோடு காதலில் -நாம்
கலந்தாக வேண்டும்
பாலோடு சுவையாக -நல்ல
பழங்களின் இனிப்பாக
சேலாடும் விழியாளே -உன்னை
சேர்ந்திட வேண்டும்
பகலுக்குள் இரவாகி -நாம்
பாசத்தில் உருவாகி
புதுவாழ்வு கண்டிட -இன்றே
புறப்பட வேண்டும்
இனியென்ன சொல்ல -இங்கே
எவருண்டு வெல்ல
கோபமென்ன மானே -நீ எனக்கு
கொல்லி மலைத் தேனே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக