உலகாளப் பொதுநீதி -இங்கு
உருவாக வேண்டும்
உள்ளவர் அனைவரும் -இனி
சமமாக வேண்டும்
களைஎடுத்த பயிராக -நல்ல
கருணையின் வடிவாக
நிலையினைத் தேடு -அதில்
நிம்மதியை நாடு
சண்டைகள் எதற்கு -தூய
சமத்துவத்தின் இடையே
அண்டை நாட்டவரோடு -என்றும்
அமைதியுடன் வாழ்க
கங்கையும் காவிரியும் -உடனே
கலந்தாக வேண்டும்
காசியும் ராமேஸ்வரமும் -நமது
கலைத் தாயின் தூண்கள்
ஒளிவெள்ளம் சேர்க்கவே -இன்று
உண்மையிலே நாமும்
அனல் புனல் திட்டங்கள் -விரைந்து
அமைத்தாக வேண்டும்
கல்விக்கு முதலிடம் -அதில்
கன்னியர்க்கு சரியிடம்
உள்ளபடி வாய்ப்புகள் -நாமும்
உடன்தருதல் வேண்டும்
ஏழைக்கு வேலை -அவர்
இருப்பதற்கு வீடு
இனி தர வேண்டும் -இல்லையேல்
எரிமலை வெடிக்கும்
கண் விழித்துப் பார்த்தேன் -அடடா
கனவென்று அறிந்தேன்
பண்பு நிறைப் பெரியீர் -வீண்
பகற்கனவு தவறோ
உருவாக வேண்டும்
உள்ளவர் அனைவரும் -இனி
சமமாக வேண்டும்
களைஎடுத்த பயிராக -நல்ல
கருணையின் வடிவாக
நிலையினைத் தேடு -அதில்
நிம்மதியை நாடு
சண்டைகள் எதற்கு -தூய
சமத்துவத்தின் இடையே
அண்டை நாட்டவரோடு -என்றும்
அமைதியுடன் வாழ்க
கங்கையும் காவிரியும் -உடனே
கலந்தாக வேண்டும்
காசியும் ராமேஸ்வரமும் -நமது
கலைத் தாயின் தூண்கள்
ஒளிவெள்ளம் சேர்க்கவே -இன்று
உண்மையிலே நாமும்
அனல் புனல் திட்டங்கள் -விரைந்து
அமைத்தாக வேண்டும்
கல்விக்கு முதலிடம் -அதில்
கன்னியர்க்கு சரியிடம்
உள்ளபடி வாய்ப்புகள் -நாமும்
உடன்தருதல் வேண்டும்
ஏழைக்கு வேலை -அவர்
இருப்பதற்கு வீடு
இனி தர வேண்டும் -இல்லையேல்
எரிமலை வெடிக்கும்
கண் விழித்துப் பார்த்தேன் -அடடா
கனவென்று அறிந்தேன்
பண்பு நிறைப் பெரியீர் -வீண்
பகற்கனவு தவறோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக