கொட்டுகின்ற பனியிலே -
உதிருதம்மா இலைகளே
தெருவிலே பனிமேடை -பார்க்கும்
திசையெலாம் பனியின்வாடை
வெள்ளைநிறப் பனியினை -அந்த
விண்ணிலிருந்து பெய்வதார்
கண்கவரும் சாலைகள் -இங்கே
கடினப் பாறையானதேன்
உடல்முழுதும் உடைகளே -அவர்
உள்ளத்தில் பல தடைகளே
படர்ந்துவரும் பனியினால் -நமக்கும்
பாதிஉறக்கம் போகுதே
சில்லுக் காற்று வீசுதே -பனியில்
சிற்றாறு ஓடுதே
தொல்லையெலாம் கூடுதே -இங்கு
தொடர்கின்ற பனியினால்
இரவுநேரம் நீளுது -அந்த
இயற்கை செய்யும் சூதிது
விரல்கள் தாளம் போடுது -ஏனோ
வேகமின்னும் குறையுது
வாடைக் காற்றில் தேகமும் -இன்னும்
வற்றல் தோற்றம் பெற்றது
கோடை என்று வருகுமோ -மீண்டும்
குதூகலம் பொங்குமோ
உதிருதம்மா இலைகளே
தெருவிலே பனிமேடை -பார்க்கும்
திசையெலாம் பனியின்வாடை
வெள்ளைநிறப் பனியினை -அந்த
விண்ணிலிருந்து பெய்வதார்
கண்கவரும் சாலைகள் -இங்கே
கடினப் பாறையானதேன்
உடல்முழுதும் உடைகளே -அவர்
உள்ளத்தில் பல தடைகளே
படர்ந்துவரும் பனியினால் -நமக்கும்
பாதிஉறக்கம் போகுதே
சில்லுக் காற்று வீசுதே -பனியில்
சிற்றாறு ஓடுதே
தொல்லையெலாம் கூடுதே -இங்கு
தொடர்கின்ற பனியினால்
இரவுநேரம் நீளுது -அந்த
இயற்கை செய்யும் சூதிது
விரல்கள் தாளம் போடுது -ஏனோ
வேகமின்னும் குறையுது
வாடைக் காற்றில் தேகமும் -இன்னும்
வற்றல் தோற்றம் பெற்றது
கோடை என்று வருகுமோ -மீண்டும்
குதூகலம் பொங்குமோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக