இளமை பயிரானது -புது
ஏக்கம் உருவானது
நிலமை சூடானது -காதல்
நினைவோ சுகமானது
அன்பு வரவானது -அதில்
ஆசை விரிவானது
முன்பு இல்லாதது -ஏனோ
மோகம் தலையேருது
எண்ணம் பறந்தோடுது -அந்த
இன்பம் நினைவாகுது
கன்னம் சிவப்பாகுது -காவல்
கரைகள் தடைபோடுது
நாணம் தடுமாறுது -நாளும்
துணை தேடுது
கானம் கசப்பாகுது -நெஞ்சில்
கவலை குடிஏறுது
இனிப்பும் பிடிக்காதது -என்
எடையும் குறைவாகுது
தூக்கம் பறிபோனது -படும்
துயரம் பெரிதானது
நாட்கள் கடந்தோடுது -என்று
நன்மை வரப்போகுது
காலம் கனிவாகுமோ -உண்மை
காதல் மணம் சேர்க்குமோ
ஒன்று இரண்டாகுமோ -வந்த
உவகை நிறைவேறுமோ
தின்று பசியாறுமோ -எனது
தேவன் வரக்கூடுமோ
ஏக்கம் உருவானது
நிலமை சூடானது -காதல்
நினைவோ சுகமானது
அன்பு வரவானது -அதில்
ஆசை விரிவானது
முன்பு இல்லாதது -ஏனோ
மோகம் தலையேருது
எண்ணம் பறந்தோடுது -அந்த
இன்பம் நினைவாகுது
கன்னம் சிவப்பாகுது -காவல்
கரைகள் தடைபோடுது
நாணம் தடுமாறுது -நாளும்
துணை தேடுது
கானம் கசப்பாகுது -நெஞ்சில்
கவலை குடிஏறுது
இனிப்பும் பிடிக்காதது -என்
எடையும் குறைவாகுது
தூக்கம் பறிபோனது -படும்
துயரம் பெரிதானது
நாட்கள் கடந்தோடுது -என்று
நன்மை வரப்போகுது
காலம் கனிவாகுமோ -உண்மை
காதல் மணம் சேர்க்குமோ
ஒன்று இரண்டாகுமோ -வந்த
உவகை நிறைவேறுமோ
தின்று பசியாறுமோ -எனது
தேவன் வரக்கூடுமோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக