பல்லவி
சத்திய நெறி வளர் சங்கரித் தாயே --இங்கு
சகலமும் நீயே தந்தருள்வாயே (சத்திய )
அனுபல்லவி
பத்தரை மாற்றுப் பசும் பொன்னும் நீயே --அந்த
பரமனின் பக்கத்தில் இருந்திடும் தாயே (சத்திய )
சரணங்கள்
எத்தரை தீயரை எதிர்த்தே அழிப்பாய் --வாடும்
ஏழைகள் வாழ்வினில் இன்பத்தை யளிப்பாய்
சித்தர்கள் போற்றிடும் ஜீவக சிந்தாமணியே --உன்னை
சிந்தையில் நினைத்தால் ஜெயிப்பதும் நிஜமே (சத்திய )
புத்தர் பிறந்த பொன்னான நாடு --தாயின்
புகழினைப் பாடுவோம் பொங்கும் அன்போடு
இத்தரை வணங்கிடும் இணையிலா செல்வி --நீயும்
ஏழைகள் வாழ்ந்திட நல்ல ஏற்றம் தர வா (சத்திய )
வல்லமை பெருகியே வளம் பெற வேண்டும் --உன்னை
வாழ்த்திப் பாடியோர் நலம் பெற துணையாய் வருவாய்
அல்லல் நீக்கியே உன்னருளினைப் பொழிவாய் --எங்கள்
அம்மையே உமையே நாங்கள் உன்னடி பணிவோம் (சத்திய )
ஏழையர் செல்வங்கள் பெற்றிடச் செய்வாய் --இனி
எல்லோர் மனதிலும் நிம்மதி தருவாய்
கோல விழி திறந்து குவலயம் காப்பாய் --உனை
கும்பிடும் அடியவர் குறைகள் களைவாய் (சத்திய )
வெம்புலி யில் அமர்ந்து வெற்றியாய் வருவாய் --நாங்கள்
வேண்டும் வரங்கள் நிறைவாய் தருவாய்
அம்புலி போன்ற அழகிய திருவே --எங்கள்
அன்னையே அறிவே நீயும் அருள் புரிவாயே (சத்திய )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக