கன்னி வயது இளமை -அவள்
கன்னம் இரண்டும் செழுமை
பெண்ணில் அவளே பொறுமை -அதனை
புரிந்து கொள்வது திறமை
மைவிழி சுழன்றிடும் மாது -என்றும்
மனதினில் இல்லையே சூது
பொய்வழி என்றுமே போகாள் -இன்றும்
பூமியில் எவரையும் நோகாள்
சிரித்திட சிந்துமே முத்து -இவள்
சீதனமாய் வந்திட்ட சொத்து
மலைத்திட வைத்திடும் அழகு -இதனை
மனதில் நினைத்தே நீ பழகு
பின்னல் சடையோ நீளம் -இந்த
பெண்கள் மனமோ ஆழம்
கன்னல் தமிழில் அழைப்பாள் -பிறரை
காதல் கணையால் துளைப்பாள்
இருக்கும் காலம் சிறப்பு -அவளை
இனிதாய் காப்பது பொறுப்பு
சிரிக்கும் சிலையும் இதுதான் -உந்தன்
சீவனைப் பறித்திடும் மதுதான்
காலம் மாறிடக் கூடும் -பலர்
கண்கள் அவளையே தேடும்
கோலம் கொடுத்திட வருவாள் -நமக்கு
குளிர்ந்த நிலவாய்த் தெரிவாள்
கன்னம் இரண்டும் செழுமை
பெண்ணில் அவளே பொறுமை -அதனை
புரிந்து கொள்வது திறமை
மைவிழி சுழன்றிடும் மாது -என்றும்
மனதினில் இல்லையே சூது
பொய்வழி என்றுமே போகாள் -இன்றும்
பூமியில் எவரையும் நோகாள்
சிரித்திட சிந்துமே முத்து -இவள்
சீதனமாய் வந்திட்ட சொத்து
மலைத்திட வைத்திடும் அழகு -இதனை
மனதில் நினைத்தே நீ பழகு
பின்னல் சடையோ நீளம் -இந்த
பெண்கள் மனமோ ஆழம்
கன்னல் தமிழில் அழைப்பாள் -பிறரை
காதல் கணையால் துளைப்பாள்
இருக்கும் காலம் சிறப்பு -அவளை
இனிதாய் காப்பது பொறுப்பு
சிரிக்கும் சிலையும் இதுதான் -உந்தன்
சீவனைப் பறித்திடும் மதுதான்
காலம் மாறிடக் கூடும் -பலர்
கண்கள் அவளையே தேடும்
கோலம் கொடுத்திட வருவாள் -நமக்கு
குளிர்ந்த நிலவாய்த் தெரிவாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக