நீரில் வாழும் மீனே -எந்தன்
நெஞ்சில் இனிக்கும் தேனே
வேரில் பழுத்த பலாவே --என்றும்
விண்ணில் உலவும் நிலவே
காணவே நினைத்தேன் தோழி --நம்
காதல் உலகில் வாழி
நாணம் என்னடி கள்ளி --நல்ல
நாளும் வருமோ சொல்லடி
கோடி காலங்கள் வாழுவோம் --நாம்
குலவி இன்பம் பெறுவோம்
தேடி வந்திட்ட செல்வமே -உன்னை
தினமும் ருசிக்க நல்ல வெல்லமே
பொன்னும் மணியும் வேண்டாம் --கட்டிய
புடவை மட்டுமே போதும்
கண்ணைப் போலக் காப்பேன் --உனை
காதல் கலையில் ஜெயிப்பேன்
எங்கே வந்திடும் தூக்கம் --அது
இளமை தந்திடும் ஏக்கம்
சங்குக் கழுத்தினில் முத்தம் --அடியே
சலிப்பின்றி தருவேன் நித்தம்
சற்றே திரும்பி நீ பாராய் --உனக்கு
சகலமும் தருவேன் வாராய்
உற்ற துணைவன் நானே --இனி
ஓடியே வருவாய் மானே
நெஞ்சில் இனிக்கும் தேனே
வேரில் பழுத்த பலாவே --என்றும்
விண்ணில் உலவும் நிலவே
காணவே நினைத்தேன் தோழி --நம்
காதல் உலகில் வாழி
நாணம் என்னடி கள்ளி --நல்ல
நாளும் வருமோ சொல்லடி
கோடி காலங்கள் வாழுவோம் --நாம்
குலவி இன்பம் பெறுவோம்
தேடி வந்திட்ட செல்வமே -உன்னை
தினமும் ருசிக்க நல்ல வெல்லமே
பொன்னும் மணியும் வேண்டாம் --கட்டிய
புடவை மட்டுமே போதும்
கண்ணைப் போலக் காப்பேன் --உனை
காதல் கலையில் ஜெயிப்பேன்
எங்கே வந்திடும் தூக்கம் --அது
இளமை தந்திடும் ஏக்கம்
சங்குக் கழுத்தினில் முத்தம் --அடியே
சலிப்பின்றி தருவேன் நித்தம்
சற்றே திரும்பி நீ பாராய் --உனக்கு
சகலமும் தருவேன் வாராய்
உற்ற துணைவன் நானே --இனி
ஓடியே வருவாய் மானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக