கலைகளின் இருப்பிடம் மீனாட்சி --இந்த
காசினி முழுவதும் மீனாட்சி
மலை மகள் பார்வதியும் மீனாட்சி --அந்த
மகேசனின் மனைவியே மீனாட்சி
வைகையில் குளித்தவள் மீனாட்சி --நல்ல
வாழ்வுக்கு அரசியே மீனாட்சி
பொய்கையைப் போன்றவள் மீனாட்சி ''தமிழ்
புலவரின் நாவிலே மீனாட்சி
மதுரையை ஆள்கிறாள் மகராசி --நம்
மனைகளில் செல்வமே மீனாட்சி
புதிருக்குள் புதிராவாள் மீனாட்சி --உலகில்
பொறுமையின் விளக்கம் மீனாட்சி
இதயத்தில் வாழ்பவள் மீனாட்சி --வாடும்
ஏழைக்கும் அருள்பவள் மீனாட்சி
உதயத்தின் ஜோதியே மீனாட்சி --இந்த
உலகிற்கு ஒளிவிளக்கு மீனாட்சி
மண்ணகம் செழிப்பது மீனாட்சி --நம்
மங்கையர் குங்குமம் மீனாட்சி
பொன்னென ஒளிர்வதும் மீனாட்சி --இந்த
பூமிக்கும் நிலவாவாள் மீனாட்சி
திங்களைப் போன்றவள் மீனாட்சி --நமக்கு
தேனருள் பொழிபவள் மீனாட்சி
சங்கென ஒலிப்பவள் மீனாட்சி --இங்கு
சத்திய ஜோதியே மீனாட்சி
காசினி முழுவதும் மீனாட்சி
மலை மகள் பார்வதியும் மீனாட்சி --அந்த
மகேசனின் மனைவியே மீனாட்சி
வைகையில் குளித்தவள் மீனாட்சி --நல்ல
வாழ்வுக்கு அரசியே மீனாட்சி
பொய்கையைப் போன்றவள் மீனாட்சி ''தமிழ்
புலவரின் நாவிலே மீனாட்சி
மதுரையை ஆள்கிறாள் மகராசி --நம்
மனைகளில் செல்வமே மீனாட்சி
புதிருக்குள் புதிராவாள் மீனாட்சி --உலகில்
பொறுமையின் விளக்கம் மீனாட்சி
இதயத்தில் வாழ்பவள் மீனாட்சி --வாடும்
ஏழைக்கும் அருள்பவள் மீனாட்சி
உதயத்தின் ஜோதியே மீனாட்சி --இந்த
உலகிற்கு ஒளிவிளக்கு மீனாட்சி
மண்ணகம் செழிப்பது மீனாட்சி --நம்
மங்கையர் குங்குமம் மீனாட்சி
பொன்னென ஒளிர்வதும் மீனாட்சி --இந்த
பூமிக்கும் நிலவாவாள் மீனாட்சி
திங்களைப் போன்றவள் மீனாட்சி --நமக்கு
தேனருள் பொழிபவள் மீனாட்சி
சங்கென ஒலிப்பவள் மீனாட்சி --இங்கு
சத்திய ஜோதியே மீனாட்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக