நாட்டுலே நடப்பும் சரியில்லே --இதுல
நல்லது கெட்டது புரியலே
ஓட்டுக்கு காசுக வீசுறான் --அதனை
உதவாக்கரை வாங்கித் திண்ணுறான்
ஊரினை ஏய்க்கப் பேசுறான் --ஏழை
உரிமையைத் தூசென ஏசுறான்
வேரினில் விஷத்தினை ஊத்துறான் --ஏன்
வேதனையைப் பிறர்க்கு கொடுக்கிறான்
நல்லவனாக நன்றாய் நடிக்கிறான் --கொடிய
நஞ்சினை அமுதமாய்க் குடிக்கிறான்
கள்ளமாய் வெளியிலே பழகுறான் --வீணே
கள்ளிச் செடியென வளருறான்
ஆசையை மனசிலே வளர்க்கிறான் --தினம்
ஆட்டங்கள் அதிகமாய் போடுறான்
காசினையே தெய்வமாய் நினைக்கிறான் --வெறும்
கயவனாய் மண்ணிலே உலவுறான்
பெண்ணிடம் கொடுமைகள் செய்யுறான் --அவரது
பெருமையை அழித்திடத் துடிக்கிறான்
மண்ணிற்கு பாரமாய் இருக்கிறான் --தன
மனசிலே நல்லதை வெறுக்கிறான்
நல்லது கெட்டது புரியலே
ஓட்டுக்கு காசுக வீசுறான் --அதனை
உதவாக்கரை வாங்கித் திண்ணுறான்
ஊரினை ஏய்க்கப் பேசுறான் --ஏழை
உரிமையைத் தூசென ஏசுறான்
வேரினில் விஷத்தினை ஊத்துறான் --ஏன்
வேதனையைப் பிறர்க்கு கொடுக்கிறான்
நல்லவனாக நன்றாய் நடிக்கிறான் --கொடிய
நஞ்சினை அமுதமாய்க் குடிக்கிறான்
கள்ளமாய் வெளியிலே பழகுறான் --வீணே
கள்ளிச் செடியென வளருறான்
ஆசையை மனசிலே வளர்க்கிறான் --தினம்
ஆட்டங்கள் அதிகமாய் போடுறான்
காசினையே தெய்வமாய் நினைக்கிறான் --வெறும்
கயவனாய் மண்ணிலே உலவுறான்
பெண்ணிடம் கொடுமைகள் செய்யுறான் --அவரது
பெருமையை அழித்திடத் துடிக்கிறான்
மண்ணிற்கு பாரமாய் இருக்கிறான் --தன
மனசிலே நல்லதை வெறுக்கிறான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக