தமிழராக உலகில் வாழுங்கள் ---நம்
தாய்த் தமிழில் எங்கும் பேசுங்கள்
அமுதமான மொழி நமதல்லவா ---அதனை
அகிலமெங்கும் பரவச் செய்தல் முறையல்லவா
முன்னாள் முதல் முழங்கிவரும் மொழியல்லவா ---நம்
மூவேந்தர் செய்து வைத்த வழியல்லவா
இந்நாளில் வெறுத்து விடல் நியாயமில்லையே ---இங்கு
தமிழை விட்டால் உங்களுக்கு கதியில்லையே
சிவனாரின் திருமகனாம் செந்தில் வேலன் ---அவர்
சீரிளமை முயற்சியினால் செழுமை பெற்றது
அரணாக காப்பதற்கு அணியாகச் சேருங்கள் ---நம்
அன்னைத் தமிழ் வாழ்கவென நீங்கள் கூறுங்கள்
பேசப் பேச தமிழென்று ம் இனிமையானது ---மன
வேதனையை தீர்க்க என்றும் மருந்தானது
சோதனைகள் வந்த போதும் வென்று நிலைத்தது ---மதுரை
சோமசுந்தரர் தலைமையிலே தமிழ் சங்கம் கண்டது
உலக நூலாம் திருக்குறளே தமிழில் உள்ளது ---அதனை
உணர்ந்து கொண்ட உலகமே வியந்து போனது
கலக எண்ணம் கொண்டவர்கள் காற்றில் ஓடுவார் ---நம்
கன்னித் தமிழ் வாழ்கவெனக் களிப்பில்லாடுவோம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக