என் ஜோட்டுப் பொண்டுகளா ---அட
இளம் பருவ மொட்டுகளா
பஞ்செனும் கால் எடுத்து ----நீங்க
பக்குவமா வரிசையா ஆடுங்கடி
அய்யனார் கோவில் அருகே ---நமக்கு
அமமைஞ்ச பெரிய பொட்டல்வெளி
பையவே சேர்ந்து பதமாக ஆடுங்கடி ---இன்று
பக்குவமா ஆடி நல்ல பெயர் வாங்குங்கடி
மாசம் முழுதும் மழைக பொழியோனும் ---இந்த
பாரெல்லாம் செழிச்சு நம் பஞ்சம் தீரோனும்
அழகாவே அடியெடுத்து அம்மனை வணங்குங்கடி --அவ
அன்பாலே தானே நாம அனைவரும் வாழோனும்
செந்நெல் விளைஞ்சு செங்கதிர் சாயுமே ---இளம்
கன்னியர்கள் மனசு வைச்சா கல்லும் கரையுமே
பொங்கல் இட்டு வைச்சு பூசைக செய்யோனும் ---நீங்க
திங்கள் இருக்கும் திசை நோக்கிப் பாடுங்கடி
ஊருக்கே படி யளக்கும் உத்தமர்கள் நாமல்லவோ ---இந்த
உழவுத் தொழிலை விட உசந்தது உண்டோடி
பேரு பெத்தவங்க நாம பெருமைகளைக் காப்பவங்க ---நம்ம
பெருமாளை நினைச்சு பிரியமாய் ஆடுங்கடி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக