கள்ளச் சிரிப்பழகி ----பெரிய
காசளவு பொட்டழகி
மெல்ல நீ வருகையில் ---என்
மேனியே சிலிர்க்குதடி
தாவணியில் பார்க்கையிலே ---மனசு
தாவித் தாவிக் குதிக்குதடி
ஆவியோ துடிக்குதடி ----உன்மேல்
ஆசை வச்சேன் பெண்மயிலே
சித்திரை பொறந்தாலே ---நமக்கு
சிறப்பாகக் கல்யாணம்
முத்திரைப் பவுனிலே ---உனக்கு
முன்னூறு போட்டிடுவேன்
காஞ்சிவரம் சென்று ---உனக்கு
கச்சிதமாய் வண்ணப் பட்டு
வாங்கி வரட்டுமாடி ----ஒரு
வார்த்தைக சொல்லேண்டி
ஏங்கியே அழுகின்றேனே ---இது
உனக்கு கேக்கலியா
தூங்கி பல நாளாச்சு ---அடி
சோறு கூட திங்கவில்லையே
கண்களைத் திறந்து ---நீயும்
கருணை மழை பெய்யோணும்
புண்பட்ட என்மனசுக்கு ---நீ
புதையலாய் வரவேணும்
காசளவு பொட்டழகி
மெல்ல நீ வருகையில் ---என்
மேனியே சிலிர்க்குதடி
தாவணியில் பார்க்கையிலே ---மனசு
தாவித் தாவிக் குதிக்குதடி
ஆவியோ துடிக்குதடி ----உன்மேல்
ஆசை வச்சேன் பெண்மயிலே
சித்திரை பொறந்தாலே ---நமக்கு
சிறப்பாகக் கல்யாணம்
முத்திரைப் பவுனிலே ---உனக்கு
முன்னூறு போட்டிடுவேன்
காஞ்சிவரம் சென்று ---உனக்கு
கச்சிதமாய் வண்ணப் பட்டு
வாங்கி வரட்டுமாடி ----ஒரு
வார்த்தைக சொல்லேண்டி
ஏங்கியே அழுகின்றேனே ---இது
உனக்கு கேக்கலியா
தூங்கி பல நாளாச்சு ---அடி
சோறு கூட திங்கவில்லையே
கண்களைத் திறந்து ---நீயும்
கருணை மழை பெய்யோணும்
புண்பட்ட என்மனசுக்கு ---நீ
புதையலாய் வரவேணும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக