வாழும் காலம் சிறிது --நமக்கு
வகுத்த கடமை பெரிது
நாளும் இதனை நினைப்பாய் --நமது
நாடு செழிக்க உழைப்பாய்
அன்னை தந்தையும் தெய்வம் --நல்ல
அறிவு தந்திட்ட ஆசான்
கண்ணைப் போல மதிப்பாய் --அவர்கள்
காட்டிடும் வழிதனில் செல்வாய்
கூடியே வாழ்ந்திடல் வேண்டும் --உன்
குணத்தினில் நல்லவை வேண்டும்
தேடியே அலைந்து உழைத்து --நீயும்
திரட்டிய செல்வத்தைக் காப்பாய்
பெண்களை மதித்திட வேண்டும் --அவர்
பின்னாலே சென்றிட வேண்டாம்
கற்பு நெறி மனதில் நிலைப்பாய் --எங்கும்
கண்ணியம் தவறாது நடப்பாய
பணத்தில் பேராசை மிகவும் தீது --அதனை
பதுக்க நினைப்பதுவும் சூது
குணத்தில் குன்றென நில்லு --வரும்
கொடுமையை எதிர்த்து வெல்லு
சொல்வதை மனதில் வாங்கு --ஏழை
சுகமாய் வாழ்ந்திட ஏங்கு
உள்ளத்தில் உண்மையை வளர்ப்பாய் --இந்த
உலகத்தில் என்றைக்கும் ஜொலிப்பாய்
வகுத்த கடமை பெரிது
நாளும் இதனை நினைப்பாய் --நமது
நாடு செழிக்க உழைப்பாய்
அன்னை தந்தையும் தெய்வம் --நல்ல
அறிவு தந்திட்ட ஆசான்
கண்ணைப் போல மதிப்பாய் --அவர்கள்
காட்டிடும் வழிதனில் செல்வாய்
கூடியே வாழ்ந்திடல் வேண்டும் --உன்
குணத்தினில் நல்லவை வேண்டும்
தேடியே அலைந்து உழைத்து --நீயும்
திரட்டிய செல்வத்தைக் காப்பாய்
பெண்களை மதித்திட வேண்டும் --அவர்
பின்னாலே சென்றிட வேண்டாம்
கற்பு நெறி மனதில் நிலைப்பாய் --எங்கும்
கண்ணியம் தவறாது நடப்பாய
பணத்தில் பேராசை மிகவும் தீது --அதனை
பதுக்க நினைப்பதுவும் சூது
குணத்தில் குன்றென நில்லு --வரும்
கொடுமையை எதிர்த்து வெல்லு
சொல்வதை மனதில் வாங்கு --ஏழை
சுகமாய் வாழ்ந்திட ஏங்கு
உள்ளத்தில் உண்மையை வளர்ப்பாய் --இந்த
உலகத்தில் என்றைக்கும் ஜொலிப்பாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக