நிலவுக்கு காதல் நம் நினைவுக்கு மோதல் --ஆயினும்
நித்தம் நீயும் நானும் ஒன்றடி நினைத்திட நன்றடி
நெஞ்சுக்குள் புகுந்து நிஜமாய்க் கலந்தாய் --இதனை
நீயே உணர்வாய் எனக்கு நிம்மதி தருவாய்
உறவினில் நெருக்கம் உள்ளத்தில் கலக்கம் --நம்
உணர்வுகள் பொங்கி உடலினுள் வழியுதே
உன்னை நினைத்து நான் என்னை நினைத்து நீ --இனி
ஒவ்வொரு கணமும் வீணாய்க் கழியுதே
மணந்திட ஆசை அந்த மன்மதன் பூசை --இந்த
மயக்கமும் அதிகமாய் சேர்ந்து கொண்டதே
குணத்தினை நினைவாய் நீ கொடி போல் படர்வாய் --வரும்
கொள்ளை இன்பமும் எனக்குப் பல கோடியே
தனியாய் பிறந்தோம் நம் தமிழாய் இணைவோம் ==நீ
தத்துவம் போதிக்கும் காதல் ஞானியே
இனியென்ன சொல்ல உன் இடை யினை அள்ள --என்னை
ஏங்கிட விடுவது உனக்கு என்ன லாபமோ
கண்கள் மலர்வாய் கதவினைத் திறவாய் --ஓடிடும்
காலத்தை மறந்து காதல் பயணம் போகலாம்
இன்ப நினைவுகள் நம் இளமையை மீட்டும் --இனி
இரவும் பகலும் என்றுமே ஒன்றுதான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக