நினைவா அல்லது இது கனவா --அவள்
நேரினில் வந்தது நிஜமா
கணமும் சிறிது நினையாது --அன்று
காதலில் விழுந்தது சரியா
படைகள் சுமந்து வந்தாள் --அதில்
பருவச் சுமைகள் அதிகம்
தடைகள் எதுவும் வரினும் --என்
தங்கம் அவளையே மணப்பேன்
கொடையில் அவளோ கர்ணன் --கன்னி
கொவ்வை இதழ்கள் அழகு
விடைகள் தெரியாத கேள்வி --நானும்
விவரம் அறியாத இளைஞன்
இரவும் பகலும் நினைப்பேன் --அந்த
இளமை அழகை ரசிப்பேன்
உறவு கொண்டிட நினைப்பேன் --காதல்
உணர்வுகள் பொங்கிடக் கிடப்பேன்
வருவாளென வாசலில் நிற்பேன் --வஞ்சி
கரம் பற்றி வாலிபத்தை ருசிப்பேன்
உருவான காதல் இங்கு நிஜமே --நாளும்
உருகியேத் தவிக்குது என்மனமே
நேரினில் வந்தது நிஜமா
கணமும் சிறிது நினையாது --அன்று
காதலில் விழுந்தது சரியா
படைகள் சுமந்து வந்தாள் --அதில்
பருவச் சுமைகள் அதிகம்
தடைகள் எதுவும் வரினும் --என்
தங்கம் அவளையே மணப்பேன்
கொடையில் அவளோ கர்ணன் --கன்னி
கொவ்வை இதழ்கள் அழகு
விடைகள் தெரியாத கேள்வி --நானும்
விவரம் அறியாத இளைஞன்
இரவும் பகலும் நினைப்பேன் --அந்த
இளமை அழகை ரசிப்பேன்
உறவு கொண்டிட நினைப்பேன் --காதல்
உணர்வுகள் பொங்கிடக் கிடப்பேன்
வருவாளென வாசலில் நிற்பேன் --வஞ்சி
கரம் பற்றி வாலிபத்தை ருசிப்பேன்
உருவான காதல் இங்கு நிஜமே --நாளும்
உருகியேத் தவிக்குது என்மனமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக