நெஞ்சில் வந்தது நினைப்பு --உன்னால்
நேற்று முழுதும் சிரிப்பு
மஞ்சம் நிறையும் களிப்பு --இந்த
மங்கை உடலினுள் சிலிர்ப்பு
காமன் கணைகள் வேகம் --அதில்
கலந்து இருப்பது மோகம்
சோகம் போக்கிடும் ஜாலம் --இந்த
சுகமும் எனக்கெத்தனைக் காலம்
இரவு நிறைய எங்கிலும் ஆட்டம் --அங்கு
இளமை குலுங்கிடும் தோட்டம்
உறவுகள் பிரிந்தால் வாட்டம் --சிலர்
உடனே எடுப்பார் ஓட்டம்
கலைகள் கற்றிட்ட மன்னன் --அதில்
காமன் இவருக்கு அண்ணன்
சிலையைப் போல இருந்தேன் --என்னை
சிற்றுளி கொண்டு வடித்தான்
கொடுத்த இன்பங்கள் கோடி --அவன்
குபேரனாய் என்றுமே வாழி
எடுத்துக் கொடுத்து இளைத்தேன் --இன்னும்
எங்கும் காணாமல் மலைத்தேன்
தேடி வருவான் அவனே --காதல்
தரிசனம் எனக்கு சுகமே
வாடிடும் பயிருக்கு நீராய் --நீயும்
என்னிடம் வந்திடுவாயே நேராய்
நேற்று முழுதும் சிரிப்பு
மஞ்சம் நிறையும் களிப்பு --இந்த
மங்கை உடலினுள் சிலிர்ப்பு
காமன் கணைகள் வேகம் --அதில்
கலந்து இருப்பது மோகம்
சோகம் போக்கிடும் ஜாலம் --இந்த
சுகமும் எனக்கெத்தனைக் காலம்
இரவு நிறைய எங்கிலும் ஆட்டம் --அங்கு
இளமை குலுங்கிடும் தோட்டம்
உறவுகள் பிரிந்தால் வாட்டம் --சிலர்
உடனே எடுப்பார் ஓட்டம்
கலைகள் கற்றிட்ட மன்னன் --அதில்
காமன் இவருக்கு அண்ணன்
சிலையைப் போல இருந்தேன் --என்னை
சிற்றுளி கொண்டு வடித்தான்
கொடுத்த இன்பங்கள் கோடி --அவன்
குபேரனாய் என்றுமே வாழி
எடுத்துக் கொடுத்து இளைத்தேன் --இன்னும்
எங்கும் காணாமல் மலைத்தேன்
தேடி வருவான் அவனே --காதல்
தரிசனம் எனக்கு சுகமே
வாடிடும் பயிருக்கு நீராய் --நீயும்
என்னிடம் வந்திடுவாயே நேராய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக