ஞாயிறு, 7 ஜூன், 2009

விருந்து


நிலவு கால இரவு -நெஞ்சில்
நினைக்க நினைக்க உறவு
பழகத் துடிக்கும் பருவம் -யாரும்
பார்த்து ரசிக்கும் உருவம்

இல்லை என்பது இடையோ -உன்
இளநகை முத்துக் கடையோ
சொல்லி சிரிப்பது தமிழோ -என்றும்
சுடர்விடு குங்கும சிமிழோ

பட்டால் செய்தது கால்கள் -கண்கள்
பாய்ந்து தாக்கிடும் வேல்கள்
ஒட்டிய மாமரக் கனிநீ -எங்கும்
உலவித் திரிந்திடும் தேனி

மேகத்தை வெல்வது கூந்தல் -உந்தன்
மெல்லிய விரல்களோ காந்தள்
மோகத்தை தீர்த்திடும் மருந்து -அது
முக்கனி மிஞ்சிடும் விருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக