திங்கள், 8 ஜூன், 2009

ஒளிவிளக்கு



வானிற்கு நிலவு ஒளிவிளக்கு -மனித
வாழ்வுக்கு
நீதியே கைவிளக்கு
தேனிற்கு
கசப்பு விதிவிலக்கு -திரை
உலகிற்கு
நீதான் ஒளிவிளக்கு

அடிக்கும் பேரையும் அணைத்திடுவாய் - பெற்ற
அன்னை சொன்னதை நினைதிடுவாய்
துடிக்கும்
வறியவர் துயர் களைவாய் - சொந்த
தோளினில்
நின்றே புகழ் பெறுவாய்

திரையினில்
வருபவர் பலர் உண்டு - கொள்கை
திறத்தினை
காக்கவோ நீ உண்டு
கரை
இட முடியா கருணை உள்ளம்- உன்னை
காண்பவர் முகத்திலோ அருளின்வெள்ளம்

வயதென்னும் எல்லை மடக்கவில்லை - தினம்
வாழ்த்திட
மக்கள் தயங்கவில்லை பயமென்னும்
சொல்லை அறிந்ததில்லை - தமிழ்
பண்பினை
என்றுமே மறந்ததில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக