ஞாயிறு, 7 ஜூன், 2009

காணிக்கை



திரைஎனும் உலகமே வாழி -உன்
சேவைக்கு உண்டோ வேலி
மறை பொருள் நெஞ்சினில் இல்லை -தமிழ்
மண்டலம் உனது எல்லை

திங்களில் இரெண்டேன வருவாய் -மக்கள்
சிந்தையில் உயர்விடம் பெறுவாய்
பொங்கிடும் நம்குலம் ஆள -தினம்
போற்றுவோர் நலமெந்ரும் சூழ

அண்ணனின் படைகலன் நீயே -எனக்கு
அடைக்கலம்தருவதில் தாயே
சின்னவன் காணிக்கை ஏற்க -இந்த
செகத்தினில் புகழினை சேர்க்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக