மனதின் மயக்கம் கனவாகும்
கனவின் தொடக்கம் நினைவாகும்
மலரின் மயக்கம் ஏதுவாகும்
மணக்கும் நிலையே உருவாகும்
இளமை மயக்கம் துணையாகும்
துணையின் மயக்கம் தூதாகும்
தூதின் மயக்கம் தொடராகும்
தொடரின் மயக்கம் நலமாகும்
நலத்தின் மயக்கம் நாடாகும்
நாட்டின் மயக்கம் நலமாகும்
நலத்தின் மயக்கம் வளமாகும்
வளத்தின் மயக்கம் வாழ்வாகும்
வாழ்வும் தாழ்வும் சமமாகும்
வந்தவர் போவது நிஜமாகும்
நிஜமே ஒருநாள் பொய்யாகும்
நிலைமையை உணர்வது மெய்யாகும்
இருப்பவர் ஒருமுறை இறப்பவரே
இறப்பவர் மறுபடி பிறப்பவரே
பிறப்பும் இறப்பும் பொதுவாகும்
பின்னணி அறிவது சுகமாகும்
சுகமும் சோகமும் ஒர்நிறையே
சூதும் வாதும் ஒர்குறையே
நிஜமே மாந்தர்க்கு நிம்மதி
நிம்மதி மனதிற்கு வெகுமதி
கனவின் தொடக்கம் நினைவாகும்
மலரின் மயக்கம் ஏதுவாகும்
மணக்கும் நிலையே உருவாகும்
இளமை மயக்கம் துணையாகும்
துணையின் மயக்கம் தூதாகும்
தூதின் மயக்கம் தொடராகும்
தொடரின் மயக்கம் நலமாகும்
நலத்தின் மயக்கம் நாடாகும்
நாட்டின் மயக்கம் நலமாகும்
நலத்தின் மயக்கம் வளமாகும்
வளத்தின் மயக்கம் வாழ்வாகும்
வாழ்வும் தாழ்வும் சமமாகும்
வந்தவர் போவது நிஜமாகும்
நிஜமே ஒருநாள் பொய்யாகும்
நிலைமையை உணர்வது மெய்யாகும்
இருப்பவர் ஒருமுறை இறப்பவரே
இறப்பவர் மறுபடி பிறப்பவரே
பிறப்பும் இறப்பும் பொதுவாகும்
பின்னணி அறிவது சுகமாகும்
சுகமும் சோகமும் ஒர்நிறையே
சூதும் வாதும் ஒர்குறையே
நிஜமே மாந்தர்க்கு நிம்மதி
நிம்மதி மனதிற்கு வெகுமதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக