வீணே பேசி
விஷத்தை கக்கி
தானே எல்லாம்
தருக்கால் நடப்பார்
நீரால் நெருப்பால்
நிதமும் அழிவார்
பிறர்க்கு உதவ
பிறிதும் நினையார்
ஊரார் பொருளை
உவந்தே பறிப்பார்
சீரார் பெண்ணை
சிதைத்தே மகிழ்வார்
வாய்மை என்பதை
வாழ்வினில் நடக்கார்
பொய்யே துணையாய்
பூமியில் வாழ்வார்
கருணை பெருமை
கனவிலும் நினையார்
அருமை பெற்றோர்
அவதியில் வைப்பார்
பிள்ளைப் பாசம்
பெரிதே கொள்ளார்
கொள்ளை பணத்தை
குவித்தே வைப்பார்
ஆலயம் செல்வது
அவர்க்கோ கடிது
அன்பு செய்வது
அளவிலா கொடிது
பண்பு என்பதோ
பசப்பு வார்த்தை
நன்றி மறந்ததால்
நாளும் மெலிவார்
இத்தனை குணத்தை
இதுவரை சொன்னேன்
புத்தியில் கொண்டு
புவியினில் வெல்வீர்
விஷத்தை கக்கி
தானே எல்லாம்
தருக்கால் நடப்பார்
நீரால் நெருப்பால்
நிதமும் அழிவார்
பிறர்க்கு உதவ
பிறிதும் நினையார்
ஊரார் பொருளை
உவந்தே பறிப்பார்
சீரார் பெண்ணை
சிதைத்தே மகிழ்வார்
வாய்மை என்பதை
வாழ்வினில் நடக்கார்
பொய்யே துணையாய்
பூமியில் வாழ்வார்
கருணை பெருமை
கனவிலும் நினையார்
அருமை பெற்றோர்
அவதியில் வைப்பார்
பிள்ளைப் பாசம்
பெரிதே கொள்ளார்
கொள்ளை பணத்தை
குவித்தே வைப்பார்
ஆலயம் செல்வது
அவர்க்கோ கடிது
அன்பு செய்வது
அளவிலா கொடிது
பண்பு என்பதோ
பசப்பு வார்த்தை
நன்றி மறந்ததால்
நாளும் மெலிவார்
இத்தனை குணத்தை
இதுவரை சொன்னேன்
புத்தியில் கொண்டு
புவியினில் வெல்வீர்
Life is a matchstick too scarce for the miracle of fire made of love.
பதிலளிநீக்கு