நிலவு என்னைச் சுடுகிறதே -ஏனோ
நெருப்பு குளிராய் தெர்கிரதே
உலவும் காற்று தகிகிறதே -உன்
உறவு மட்டும் இனிக்கிறதே
இரவு முழுதும் உறங்கவில்லை --அந்த
இதழின் இனிமை குறையவில்லை
மறந்து போன நினைவுகளால் -வந்த
மயக்கம் இன்னும் தெளியவில்லை
இளமை விருந்து எனக்காக -என்
இதயம் முழுதும் உனக்காக
பழகி தெரிந்த அனுபவங்கள் --இந்த
பாவி உடலை வதைக்கிறதே
ஈரெட்டு வயது இல மனது -அதனால்
ஏங்கி தவிக்கிது என்மனது
போரிட்டு எனைவெல்ல வருவாயா -இல்லை
புலம்பி தவித்திட விடுவாயா
ஊரார் பழித்து சொன்னாலும் -என்
உற்றார் எதிர்த்து நின்றாலும்
வேறோர் உலகம் நான் படைப்பேன் -பருவ
விருந்து வைக்க உன்னை அழைப்பேன்
அச்சம் நாணம் தனை மறந்தேன் -என்
ஆயுள் முழுதும் உனைமறவேன்
மிச்சமின்றி நான் மறைந்தால் -பிறந்து
மீண்டும் உன்னையே காதலிப்பேன்
நெருப்பு குளிராய் தெர்கிரதே
உலவும் காற்று தகிகிறதே -உன்
உறவு மட்டும் இனிக்கிறதே
இரவு முழுதும் உறங்கவில்லை --அந்த
இதழின் இனிமை குறையவில்லை
மறந்து போன நினைவுகளால் -வந்த
மயக்கம் இன்னும் தெளியவில்லை
இளமை விருந்து எனக்காக -என்
இதயம் முழுதும் உனக்காக
பழகி தெரிந்த அனுபவங்கள் --இந்த
பாவி உடலை வதைக்கிறதே
ஈரெட்டு வயது இல மனது -அதனால்
ஏங்கி தவிக்கிது என்மனது
போரிட்டு எனைவெல்ல வருவாயா -இல்லை
புலம்பி தவித்திட விடுவாயா
ஊரார் பழித்து சொன்னாலும் -என்
உற்றார் எதிர்த்து நின்றாலும்
வேறோர் உலகம் நான் படைப்பேன் -பருவ
விருந்து வைக்க உன்னை அழைப்பேன்
அச்சம் நாணம் தனை மறந்தேன் -என்
ஆயுள் முழுதும் உனைமறவேன்
மிச்சமின்றி நான் மறைந்தால் -பிறந்து
மீண்டும் உன்னையே காதலிப்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக