அந்தர வானில் பறந்து -வந்து
அமெரிக்க மண்ணை மிதித்துவிட்டேன்
சுந்தர மிகுந்த சோலைகளே -நல்ல
சுத்தமாய் இருக்கின்ற சாலைகளே
ஆண்டது ஆங்கில அரசாங்கம் -அதனை
அடியோடு எதிர்த்தது மக்கள் படை
மீண்டது சுதந்திரம் நாட்டினிலே -இதனை
மேதினி அறிந்தது விரைவினிலே
ஆணும் பெண்ணும் சமஉரிமை -இதை
அறிந்து நடப்பது நம்பெருமை
தேனினுமினிய மொழி பேசி -பலர்
சேர்ந்து வாழ்தலை கண்டேனே
எந்த துறையிலும் முதலிடமே -உள்ள
எல்லா ஆற்றலும் இவ்விடமே
சொந்தம் போலவே நம்மிடமே -தினம்
சோதரராய் வாழ்வதும் இவர் குணமே
வானம் அறிந்தது இவராற்றல் -சிலர்
வைது தீர்ப்பது பெரும் கூச்சல்
ஞானம் இன்னும் பெறுவதற்கே -நமது
நாட்டிற்கு இன்னமும் வருகின்றாரே
இவரைப் போலவே நாமுயர்வோம் -நம்
இந்தியா வளர்ந்திட உழைத்திடுவோம்
உள்ளதை நாட்டிற்கு ஈந்திடுவோம் -உலகில்
உன்னத நிலையினை பெற்றிடுவோம்
அமெரிக்க மண்ணை மிதித்துவிட்டேன்
சுந்தர மிகுந்த சோலைகளே -நல்ல
சுத்தமாய் இருக்கின்ற சாலைகளே
ஆண்டது ஆங்கில அரசாங்கம் -அதனை
அடியோடு எதிர்த்தது மக்கள் படை
மீண்டது சுதந்திரம் நாட்டினிலே -இதனை
மேதினி அறிந்தது விரைவினிலே
ஆணும் பெண்ணும் சமஉரிமை -இதை
அறிந்து நடப்பது நம்பெருமை
தேனினுமினிய மொழி பேசி -பலர்
சேர்ந்து வாழ்தலை கண்டேனே
எந்த துறையிலும் முதலிடமே -உள்ள
எல்லா ஆற்றலும் இவ்விடமே
சொந்தம் போலவே நம்மிடமே -தினம்
சோதரராய் வாழ்வதும் இவர் குணமே
வானம் அறிந்தது இவராற்றல் -சிலர்
வைது தீர்ப்பது பெரும் கூச்சல்
ஞானம் இன்னும் பெறுவதற்கே -நமது
நாட்டிற்கு இன்னமும் வருகின்றாரே
இவரைப் போலவே நாமுயர்வோம் -நம்
இந்தியா வளர்ந்திட உழைத்திடுவோம்
உள்ளதை நாட்டிற்கு ஈந்திடுவோம் -உலகில்
உன்னத நிலையினை பெற்றிடுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக