வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே -நம்
வள்ளலார் பிறந்த பழம் பெரு நாடு
சூழம் நல்வளங்கள் துலங்கும் நாடு -இனிய
சுதந்திரம் கண்ட இந்திய நாடு
அன்பும் அறிவும் நிறைந்த நாடு -தூய
அருளிலே உலகை ஆளும் நாடு
அண்ணல் காந்தி பிறந்த நாடு மனித
ஆற்றலும் உஊக்கமும் வளர்த்த நாடு
துன்பம் நீங்கிட தொழில்கள் ஓங்கிட -கை
தொட்டது யாவும் துலங்கும் நாடு
மண்ணில் பொன்னை விளைக்கும் நாடு -நல
மங்கையர் கற்பினை மதிக்கும் நாடு
சிங்க மறவர் சிலிர்க்கும் நாடு -தமிழ்
செம்மொழி பெருமை செறிந்த நாடு
மங்கல நதிவளம் பொங்கிடும் நாடு -இந்த
மாபெரும் நாடிதை மதித்து நீபாடு
இறையின் பெருமை அறிந்திட்ட நாடு -என்றும்
ஈகையில் எவரையும் இணைக்கும் நாடு
குறையை நிறையென கொள்ளும் நாடு -இங்கு
கொடிய பசிப்பிணி தீர்த்திடும் நாடு
புத்த்ர் பிறந்த புண்ணிய நாடு -நமது
போதி தர்மர் வாழ்ந்த வீடு
சத்திய நெறி சார்ந்த நாடு --மனதில்
சமத்துவ எண்ணம் மலர்ந்த நாடு
எங்கும் எதிலும் எமது நாடு -இன்னும்
ஏற்றம் பெற்றிட இனியென தேடு
பொங்கும் கடல்கள் சூழும் நாடு -பல
புதுமையில் உலகையே வெல்லும் நாடு
வள்ளலார் பிறந்த பழம் பெரு நாடு
சூழம் நல்வளங்கள் துலங்கும் நாடு -இனிய
சுதந்திரம் கண்ட இந்திய நாடு
அன்பும் அறிவும் நிறைந்த நாடு -தூய
அருளிலே உலகை ஆளும் நாடு
அண்ணல் காந்தி பிறந்த நாடு மனித
ஆற்றலும் உஊக்கமும் வளர்த்த நாடு
துன்பம் நீங்கிட தொழில்கள் ஓங்கிட -கை
தொட்டது யாவும் துலங்கும் நாடு
மண்ணில் பொன்னை விளைக்கும் நாடு -நல
மங்கையர் கற்பினை மதிக்கும் நாடு
சிங்க மறவர் சிலிர்க்கும் நாடு -தமிழ்
செம்மொழி பெருமை செறிந்த நாடு
மங்கல நதிவளம் பொங்கிடும் நாடு -இந்த
மாபெரும் நாடிதை மதித்து நீபாடு
இறையின் பெருமை அறிந்திட்ட நாடு -என்றும்
ஈகையில் எவரையும் இணைக்கும் நாடு
குறையை நிறையென கொள்ளும் நாடு -இங்கு
கொடிய பசிப்பிணி தீர்த்திடும் நாடு
புத்த்ர் பிறந்த புண்ணிய நாடு -நமது
போதி தர்மர் வாழ்ந்த வீடு
சத்திய நெறி சார்ந்த நாடு --மனதில்
சமத்துவ எண்ணம் மலர்ந்த நாடு
எங்கும் எதிலும் எமது நாடு -இன்னும்
ஏற்றம் பெற்றிட இனியென தேடு
பொங்கும் கடல்கள் சூழும் நாடு -பல
புதுமையில் உலகையே வெல்லும் நாடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக