சித்திரை மாசம் பொறந்தாச்சு ---மனசில்
சில்லென்று ஆனந்தம் வந்தாச்சு
இத்தரை எங்கிலும் பசுமையடி ---நம்
இந்தியா சிறந்திடப் பாடுங்கடி
கூடியே நின்று கும்மி போடுங்கடி ---நம்
குடும்பங்கள் வாழ்ந்திட வேண்டுங்கடி
ஓடியாடி நன்றாய் உழைத்திடுவோம் ---இங்கு
உழவுத் தொழில் செய்து வாழ்ந்திடுவோம்
பெண்களைப் பெரிதாய் போற்றிடுவோம் ---அவர்கள்
பெருமையாய் சுகம்பெற செய்திடுவோம்
கண்களைப் போன்றது கற்பாகும் ---அதனை
காப்பது அனைவரின் பொறுப்பாகும்
சாதிசமய பேரை சொல்லி ---இங்கு
சண்டைகள் எதுவும் மூட்ட வேண்டாம்
நீதி வழி சென்று வென்றிடுவோம் ---தர்ம
நியாயத்திற்காக உயிர் தருவோம்
படைப்பினில் மனிதர்கள் சரிசமமே ---அதை
பார்த்து தெளிவது நல்மனமே
கிடைப்பதை பிடித்து முன்னேறு ---எந்த
கேலிக்கும் உழைப்பால் பதில் கூறு
சில்லென்று ஆனந்தம் வந்தாச்சு
இத்தரை எங்கிலும் பசுமையடி ---நம்
இந்தியா சிறந்திடப் பாடுங்கடி
கூடியே நின்று கும்மி போடுங்கடி ---நம்
குடும்பங்கள் வாழ்ந்திட வேண்டுங்கடி
ஓடியாடி நன்றாய் உழைத்திடுவோம் ---இங்கு
உழவுத் தொழில் செய்து வாழ்ந்திடுவோம்
பெண்களைப் பெரிதாய் போற்றிடுவோம் ---அவர்கள்
பெருமையாய் சுகம்பெற செய்திடுவோம்
கண்களைப் போன்றது கற்பாகும் ---அதனை
காப்பது அனைவரின் பொறுப்பாகும்
சாதிசமய பேரை சொல்லி ---இங்கு
சண்டைகள் எதுவும் மூட்ட வேண்டாம்
நீதி வழி சென்று வென்றிடுவோம் ---தர்ம
நியாயத்திற்காக உயிர் தருவோம்
படைப்பினில் மனிதர்கள் சரிசமமே ---அதை
பார்த்து தெளிவது நல்மனமே
கிடைப்பதை பிடித்து முன்னேறு ---எந்த
கேலிக்கும் உழைப்பால் பதில் கூறு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக