அழகிற்கு அழகானாய் -என்
அறிவுக்குத் துணையானாய்
பழகிடக் கனியானாய் -அன்பே
என்பசிக்கு விருந்தானாய்
தேனிற்கு சுவைபோலே -நல்ல
தீந்தமிழ் சொல்போலே
கண்ணிற்கு ஒளிபோல -எனது
கருத்தினை நீகவர்ந்தாய்
எத்தனை இரவுகளோ -அதில்
ஏக்கமே வரவாகும்
முத்தத்தில் நான்னனைந்தேன் -சகியே
மோகத்தில் கொன்றதென்ன
உன்னையே தினம் நினைத்தேன் -கனவில்
உன்னுடல் நானனைத்தேன்
இன்னுமா மனக்கலக்கம் -அட
என்னடி புதுமயக்கம்
மயக்கத்தில் ஆழ்த்துகிறாய் -காதல்
மையலில் வீழ்த்துகிறாய்
தயக்கத்தில் நான்தவிக்க -எங்கே
தையலே ஓடுகிறாய்
வாடுது என்மனது -தினம்
வதங்குது இள வயது
தேடுதல் புரியல்லையோ -அழகு
தேவதை பதில்சொல்லு
அறிவுக்குத் துணையானாய்
பழகிடக் கனியானாய் -அன்பே
என்பசிக்கு விருந்தானாய்
தேனிற்கு சுவைபோலே -நல்ல
தீந்தமிழ் சொல்போலே
கண்ணிற்கு ஒளிபோல -எனது
கருத்தினை நீகவர்ந்தாய்
எத்தனை இரவுகளோ -அதில்
ஏக்கமே வரவாகும்
முத்தத்தில் நான்னனைந்தேன் -சகியே
மோகத்தில் கொன்றதென்ன
உன்னையே தினம் நினைத்தேன் -கனவில்
உன்னுடல் நானனைத்தேன்
இன்னுமா மனக்கலக்கம் -அட
என்னடி புதுமயக்கம்
மயக்கத்தில் ஆழ்த்துகிறாய் -காதல்
மையலில் வீழ்த்துகிறாய்
தயக்கத்தில் நான்தவிக்க -எங்கே
தையலே ஓடுகிறாய்
வாடுது என்மனது -தினம்
வதங்குது இள வயது
தேடுதல் புரியல்லையோ -அழகு
தேவதை பதில்சொல்லு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக