நாளை என்ன நாளை -அதில்
நமக்கு என்ன வேலை
இன்றே முடிக்க வருக -நம்
இளைஞர் கூட்டம் எழுக
வரப்பு வெட்டி சேர்க்கலாம் -இங்கு
வாய்க்கால் ஆழம் ஆக்கலாம்
இருக்கும் புல்லை களையலாம் -நாம்
இயன்ற சேவை செய்யலாம்
ஊரை சுத்தம் செய்யலாம் -நம்
ஊருணி மண்ணை வாறலாம்
இறைத்து நீர் பாச்சலாம் -இன்னும்
இரவுப் பள்ளி நடத்தலாம்
அறிவுப் பசிதனை தீர்க்கலாம் -நல்ல
அன்புப் பாதை காட்டலாம் -நன்கு
வாழும் வழியினைக் கூறலாம் -மண்ணில்
வறுமை நீங்கி வாழலாம்
மூத்த வயதோர் தமக்குமே -நம்மால்
முடிந்த உதவி செய்யலாம்
பார்க்கும் பொருள் அனைத்திலும் -அந்த
பரம்பொருள் தன்னையே காணலாம்
துணையை இழந்த தோகைக்கும் -யாரும்
தோள் கொடுத்துக் காக்கலாம்
கனவும் நனவாய் மாறலாம் -இறைவன்
கருணையால் உலகில் வாழலாம் - 215.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக