ஞாயிறு, 2 மார்ச், 2014

மாறுமோ 216

கால   நேரம்  மாறலாம் -கொஞ்சும்
 காதல்  மாறிப்  போகலாம்
 கோலம்  சற்று  மீறலாம் -நீ
 கொண்ட  கொள்கை  மாறுமோ

 நன்மை  தீமை  யாகலாம் -இங்கு
 நாளும்   இரவாய் போகலாம்
 அன்பு  பகையாய்  ஆகலாம் -உனது
 ஆசை  மட்டும்  மாறுமோ

 ஓடும்  நதியும்  மாறலாம் -நமது
 உயர்வும்   தாழ்வாய்  போகலாம்
 தேடும்  செல்வம் நிலைக்குமோ -நமது
 தேவன்  கருணை  கிடைக்குமோ

 வானில்  போகும் மேகமும் -உனக்கு
 வாழ்த்து  சொல்லிப்  போகுமே
 வீணில்  மனதில்  வாட்டமேன் -இனி
 வெல்லும்  வழியைக்  காணுவாய்

 கண்ணில்  தோன்றும் காட்சிகள் -வீணில்
 உனது கால் தடத்தை  மாற்றலாம்
 எண்ணிப் பார்த்து  செல்லுவாய் -வாழ்வில்
 எதிலும்  வெற்றி  கொள்ளுவாய்

 உழைத்து  தேடுநீ  பணத்தையே -என்றும்
 உறுதி  கொள்ளு  குணத்திலே
 களைத்துப்  போதல்  இல்லையே -நீ
 காண  வேண்டும்  புதுஎல்லையே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக