அவன் ; காதல் வலையினை வீசியென்னை ---அன்று
கவனமாய் சிறையினில் அடைத்தவளே
வேதனை அதிகம் கொல்லுதடி --மனம்
விரும்பிய விதம்தனை சொல்லுதடி
அவள் ; சாதனை எதுவும் செய்யவில்லை --இந்த
சவடால் அளப்புக்கும் குறைசல் இல்லை
சோதனை வந்தால் பொறுத்துக்கையா --பின்னால்
சுகமும் உனக்கே கிடைத்திடும்யா
அவன் ; இரவில் எனக்கும் தூக்கமில்லை --ஆனால்
இதயத்தில் நிறைய ஏக்கமுண்டு
உறவினைப் பெற்றிட மனமில்லையா --நான்
உருகித் தவிப்பது தெரியல்லியா
அவள் ; சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையா --நாம்
சுகப்பட நல்வழி தெரியல்லியா
உள்ளத்தை நீயின்று விளங்கிக்கையா --நீயும்
உருப்பட நல்ல தொழில் செய்திடய்யா
அவன் ; கடமை என்னவென்று விளங்கிக்கிட்டேன் --எந்தன்
கண்மணி சொல்படி நடந்துகிறேன்
உடமை நீதாண்டி எந்தக் காலத்திலும் --உன்னை
மறவேனடி நான் எந்தக் கோலத்திலும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக