அழகான சிலைஒன்று நடமாடுது -அதைக்
காணும் மனமிங்கே தடுமாறுது
விலைகூற முடியாத பொருள் அல்லவா -இதை
விவரிக்க யாராலும் முடியாததோ
கண்ணென்ற சொல்கூடக் கவியாகுமே -உன்
காலடி என்காதில் சுவையாகுமே
என்நாவில் நீவாழும் இடமாகுமே -அதில்
இருவேளை என்பூசை உனக்காகுமே
பட்டான உன்மேனி பளிங்காகுமே -உனது
பருவமோ பளிச்சென்று விருந்தாகுமே
தொட்டாலே இனிக்கின்ற சுவைமாங்கனி -நீ
தேன்பொங்கிப் பாய்கின்ற எழிற்கோலமோ
கண்ணாலே பார்த்தோர்கள் களிப்பாகுவார் -பின்னர்
காரிகை உனைஎண்ணி மனம்வாடுவார்
பொன்னாலே செய்தாரோ புவிவாழ்த்தவே -ஏனோ
புறப்பட்டாய் உலகத்தை தடம் மாற்றவே
எண்ணிரெண்டு வயதுள்ள எங்கள்தேவியே -அந்த
இலங்கனிகள் காண்பதற்கு அலங்காரமே
என்னிதயம் புண்ணாதல் என்செல்வமே -இனி
எதிர்வந்தால் மகிழ்வாகும் என்னுள்ளமே
நாமினி எந்நாளும் ஒன்றாகலாம் -நம்
வாழ்வில் இன்பங்கள் நன்றாகலாம்
நீஎன்றும் என்வாழ்வில் ஒளி கூட்டம்மா -நான்
நிலையாக வாழ்ந்திடவே வழிகாட்டம்மா
காணும் மனமிங்கே தடுமாறுது
விலைகூற முடியாத பொருள் அல்லவா -இதை
விவரிக்க யாராலும் முடியாததோ
கண்ணென்ற சொல்கூடக் கவியாகுமே -உன்
காலடி என்காதில் சுவையாகுமே
என்நாவில் நீவாழும் இடமாகுமே -அதில்
இருவேளை என்பூசை உனக்காகுமே
பட்டான உன்மேனி பளிங்காகுமே -உனது
பருவமோ பளிச்சென்று விருந்தாகுமே
தொட்டாலே இனிக்கின்ற சுவைமாங்கனி -நீ
தேன்பொங்கிப் பாய்கின்ற எழிற்கோலமோ
கண்ணாலே பார்த்தோர்கள் களிப்பாகுவார் -பின்னர்
காரிகை உனைஎண்ணி மனம்வாடுவார்
பொன்னாலே செய்தாரோ புவிவாழ்த்தவே -ஏனோ
புறப்பட்டாய் உலகத்தை தடம் மாற்றவே
எண்ணிரெண்டு வயதுள்ள எங்கள்தேவியே -அந்த
இலங்கனிகள் காண்பதற்கு அலங்காரமே
என்னிதயம் புண்ணாதல் என்செல்வமே -இனி
எதிர்வந்தால் மகிழ்வாகும் என்னுள்ளமே
நாமினி எந்நாளும் ஒன்றாகலாம் -நம்
வாழ்வில் இன்பங்கள் நன்றாகலாம்
நீஎன்றும் என்வாழ்வில் ஒளி கூட்டம்மா -நான்
நிலையாக வாழ்ந்திடவே வழிகாட்டம்மா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக