நாடு என்பது நாடு --அதில்
நல்லது செய்திடப் பாரு
வீடு என்பது வீடு --அங்கு
விரும்பி அன்பிலே வாழு
கூடு என்பது கூடு --என்றும்
கொள்கை வழியினைத் தேடு
ஏடு என்பது ஏடு --உள்ளே
இருக்கும் அறிவைப் பாரு
கண்ணில் கருணை வேண்டும் --நெஞ்சில்
கள்ளம் மறைய வேண்டும்
பெண்ணில் பொறுமை வேண்டும் --நன்றாய்
பேசவும் திறமை தான் தூண்டும்
மனதில் உறுதி கொள்வாய் --என்றும்
மகிழ்வு பொங்கிட வேண்டும்
குணத்தில் சிறக்க வேண்டும் --உன்
குடும்பம் வாழ்ந்திட வேண்டும்
இருக்கும் வாழ்வை மதிப்பாய் --நீ
இறைவன் தன்னையே துதிப்பாய்
பெருமைகள் பெற்றிட வேண்டும் --அன்பால்
பூமியை ஆண்டிட வேண்டும்
நல்லது செய்திடப் பாரு
வீடு என்பது வீடு --அங்கு
விரும்பி அன்பிலே வாழு
கூடு என்பது கூடு --என்றும்
கொள்கை வழியினைத் தேடு
ஏடு என்பது ஏடு --உள்ளே
இருக்கும் அறிவைப் பாரு
கண்ணில் கருணை வேண்டும் --நெஞ்சில்
கள்ளம் மறைய வேண்டும்
பெண்ணில் பொறுமை வேண்டும் --நன்றாய்
பேசவும் திறமை தான் தூண்டும்
மனதில் உறுதி கொள்வாய் --என்றும்
மகிழ்வு பொங்கிட வேண்டும்
குணத்தில் சிறக்க வேண்டும் --உன்
குடும்பம் வாழ்ந்திட வேண்டும்
இருக்கும் வாழ்வை மதிப்பாய் --நீ
இறைவன் தன்னையே துதிப்பாய்
பெருமைகள் பெற்றிட வேண்டும் --அன்பால்
பூமியை ஆண்டிட வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக