வெள்ளி வண்ணத் தாரகை --அவள்
விழிகள் வானின் கருநீலம்
புள்ளி மானென வந்தாள் --என்
புலன்களை மாற்றிட வைத்தாள்
பொன்னால் வடித்த உடல் --அவளது
பொற்பாதம் பூவென்னும் மடல்
கண்ணால் என்னை வளைத்தாள் --ஒரு
கணத்தில் என்னையே மறந்தேன்
சிரித்தால் என்ஜீவன் பறிபோகுமே --முகம்
சீதள நிலவென ஆகுமே
விரித்தாள் கடையை எதிரிலே --நான்
விழுந்தேன் காதல் வலையிலே
காலம் ஓடுது மெல்ல --எனது
காதலை எப்படிச் சொல்ல
ஆழம் விழுதுகள் போலவே --எங்கும்
ஆசைகள் ஊறுது உள்ளே
சொல்லில் சொல்லிட நினைத்தேன் --அந்த
சொர்க்கத்தை எண்ணியே துடித்தேன்
பள்ளியில் புதுப் பாடம் படிப்பேன் --தினம்
பணிவிடை செய்தே மகிழ்வேன்
விழிகள் வானின் கருநீலம்
புள்ளி மானென வந்தாள் --என்
புலன்களை மாற்றிட வைத்தாள்
பொன்னால் வடித்த உடல் --அவளது
பொற்பாதம் பூவென்னும் மடல்
கண்ணால் என்னை வளைத்தாள் --ஒரு
கணத்தில் என்னையே மறந்தேன்
சிரித்தால் என்ஜீவன் பறிபோகுமே --முகம்
சீதள நிலவென ஆகுமே
விரித்தாள் கடையை எதிரிலே --நான்
விழுந்தேன் காதல் வலையிலே
காலம் ஓடுது மெல்ல --எனது
காதலை எப்படிச் சொல்ல
ஆழம் விழுதுகள் போலவே --எங்கும்
ஆசைகள் ஊறுது உள்ளே
சொல்லில் சொல்லிட நினைத்தேன் --அந்த
சொர்க்கத்தை எண்ணியே துடித்தேன்
பள்ளியில் புதுப் பாடம் படிப்பேன் --தினம்
பணிவிடை செய்தே மகிழ்வேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக