என்றும் ; 831
உலகம் நல்லா புரிஞ்சிடுச்சு ---இருக்கும்
உண்மை நிறைய தெரிஞ்சிடுச்சு
கலகம் தீர்ஞ்சிடுச்சு தங்கமே ---நம்ம
கண்ணன் துணையிருக்கு என்றுமே
ஊர்கள் செழிக்க வேணும் --நம்
உயிர்கள் பிழைக்க வேணும்
வேர்கள் வாழ வேண்டும் --தங்கமே
விவசாயம் வளர வேண்டும் எங்குமே
இல்லை யென்பதும் இல்லை --அது
இருந்தாலோ இன்னும் தொல்லை
கள்ளம் மறைய வேண்டும் தங்கமே --வந்த
கவலைகள் நீங்க வேண்டும் தங்கமே
கல்வி பெருக வேண்டும் ---உலகில்
கற்றோர் நிறைய வேண்டும்
சொல்லில் உண்மை வேண்டும் தங்கமே --இனிய
சொர்க்கம் மண்ணில் உண்டு நம்புமே
இருந்ததை சொல்லி வைத்தேன் ---எனது
இதயத்தை திறந்து விட்டேன்
சிறந்ததை கொள்ள வேண்டும் தங்கமே ---நீ
சிறப்பாக வாழ வேண்டும் என்றுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக